இந்த உணவுகளை சாப்பிட்டால் கேன்சர் வரும்

உயிர்கொல்லி நோயாக கருதப்பட்ட கேன்சருக்கு மருத்துவ உலகில் சிகிச்சைகள் பெருகிவிட்டன. எனினும் லட்சங்கள் அல்லது கோடிகளில் சேவாகும் சிகிச்சைகளை சாதாரண மக்கள் நினைத்து கூட பார்க்க முடியாது. இப்படி மனித உயிரை காவு வாங்கும் கேன்சரில் இருந்து தப்பிக்க இந்த உணவுகளை தவிர்த்தால் மிகவும் நல்லது.

சோடா

நீரிழிவு நோய்க்கு மட்டும் இல்லை கேன்சருக்கும் சோடாக்கள் தான் பெரும் பங்கு வகிக்கின்றன. குளிர்பானங்களில் நிறத்திற்காக கலக்கப்படும் பொருட்கள் கேன்சருக்கு வழி காட்டுகின்றன. தாகமாக இருந்தால் குளிர்ந்த நீரோ, மோர், நிறமில்லாத சோடாக்களையோ பயன்படுத்தலாம்.

கிரில் செய்யப்பட்ட மாமிசம்

பொதுவாகவே கிரில் செய்யப்பட்ட உணவுகள் பலரின் பிடித்த உணவாக இடம்பெற்றிருக்கும். தனித்துவமான அதன் சுவை பலர் அடிமைகளாவே இருக்கின்றனர். ஆனால் அதிக அளவு வெப்பம் செய்யப்பட்ட கிரில் கேன்சரை உருவாக்கும் ஹைட்ரொகார்பன்களை உண்டாக்குகிறதாக கூறப்படுகிறது. எனவே இதை தவிர்ப்பதும் நல்லது. அதற்கு பதில் வேகவைத்த மாமிசம் அல்லது குறைந்த எண்ணெய் விட்டு சமைக்கப்பட்ட மாமிசம் பாதுகாப்பானது.

உருளைக்கிழங்கு சிப்ஸ்

அதிக கொழுப்பு உள்ள எண்ணையில் பொறிக்கப்படும் இந்த உருளை கிழங்கு சிப்ஸ் கூட கேன்சருக்கு வழிவகுக்கிறதாம். இதற்கு பதில் வேகவைத்து பொறித்த வாழைப்பழம் அல்லது காய்கறி சிப்ஸ் சிறந்தது.

மது

மது நாட்டிற்கும் வீட்டிற்கும் மட்டும் அல்ல மனிதனின் உடல் நலத்திற்கும் கேடு தான். முக்கியமாக தலை, நுரையீரல், மார்பு மற்றும் கழுத்து பகுதிகளில் உண்டாகும் கேன்சருக்கு குடி பழக்கம் தான் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே மது பழக்கம் உங்கள் உயிரை எல்லா வகையிலும் பழிவாங்கும் என்பதை மறக்காதீர்கள்.

பிரெஞ்சு பிரைஸ்

வெளிநாடுகளில் மிக பிரபலமான உணவான பிரெஞ்சு பிரைஸ் தற்போது இந்தியாவிலும் மிக பிரபலம். வெளிநாட்டு உணவுகளுக்கு பழகின பலரும் பிரெஞ்சு பிரைஸின் ரசிகர்களாக தான் இருப்பார்கள். ஆனால் அதிக கொழுப்பு சத்து நிறைந்த எண்ணையில் பொறிக்கப்பட்டு உப்பு சேர்க்க பட்ட இந்த உணவுகளில் கேன்சரை உருவாக்கும் ‘அக்ரிலமைட்’ பொருள் இருக்கிறதாம். சிகரட்டிலும் இதே பொருள் தான் இருக்கிறது என்பது தான் அதிர்ச்சி தகவல்.

பதப்படுத்தப்பட்ட மாமிசம்

பல மாதங்களுக்கு கெடாமல் இருக்க பய்னபடுத்த படும் செயற்கை பொருட்கள் கேன்சரின் தோழர்கள் என்று அறிந்துகொள்ளுங்கள். இப்போதெல்லாம் பலரும் பதப்படுத்தப்பட்டு கடைகளில் விற்கும் அசைவ உணவுகளை வாங்கி உண்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். குறைந்த நேரத்தில் சமைக்க முடியும் என்பதே இதற்கு காரணம். ஆனால் இவற்றில் கலக்கப்படும் நைட்ரேட் உங்கள் உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் என்று சொன்னால் நம்புவீர்களாக. ஆம் நம்புங்கள்.

செயற்கை சர்க்கரை

இப்போதெல்லாம் நீரிழிவு நோயாளிகள் பலரும் வெள்ளை சர்க்கரைக்கு பதில் செயற்கை சர்க்கரையை பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர். வெள்ளை சர்க்கரை எந்த அளவுக்கு நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கிறதோ. அதே போல் இந்த செயற்கை சர்க்கரையும் கேன்சருக்கு வழி வகுகிறது. எனவே இதற்கு பதில் தேன், வெல்லம், கருப்பட்டி போன்ற இயற்கை சர்க்கரைகளை எடுத்து கொள்ளலாம்.

Recent Post

RELATED POST