குடைமிளகாய் மசாலா மற்றும் நறுமணப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டது. இப்போது இயற்கையாகவே பல ஆரோக்கிய நன்மைகள் இருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகிறது. ஆஸ்திரேலியா, ஆசியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் அதிகம் பயிரிடப்படுகிறது.
குடைமிளகாய் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டவை, அங்கு அவை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பயிரிடப்படுகின்றன.
குடைமிளகாய் மஞ்சள், பச்சை, ஆரஞ்சு மற்றும் சிவப்பு வண்ணங்களின் வகைகளில் வருகிறது. குடைமிளகாயில் கொழுப்புச் சத்து, சோடியம் குறைவாக இருப்பதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் உணவில் அடிக்கடி குடைமிளகாயை சேர்த்துக் கொள்ளலாம்.
குடைமிளகாயை உணவில் சேர்த்து வந்தால் ட்ரைகிளிசரைடு அளவையும் கொழுப்பையும் குறைக்கும். உடலுக்கு நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது சைனஸ், சளி மற்றும் தொண்டை வலி ஆகியவற்றை குணப்படுத்துகிறது.
குடைமிளகாய் வைட்டமின்கள் ஏ மற்றும் சி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும் பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு உள்ளிட்ட சத்துக்கள் இதில் இருக்கிறது. குடைமிளகாய் வயது முதிர்வை தடுக்கும் தன்மை உடையது.
நீங்கள் புற்றுநோயைத் தவிர்க்க விரும்பினால், இன்று கேப்சிகம் உட்கொள்ளத் தொடங்குங்கள். இது புற்றுநோயை வெல்லும் திறன் கொண்டது. உலகெங்கிலும் உள்ள நிபுணர்களும் விஞ்ஞானிகளும் புற்றுநோய்க்கான சிகிச்சைக்காக கேப்சிகம் குறித்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
குடைமிளகாய் உங்களுக்கு ஆற்றலைத் தருகிறது மற்றும் உடலை சுறுசுறுப்பாக்குகிறது. குடைமிளகாய் வயிறு உப்புசம், வாயு தொல்லை பிரச்சனையை போக்கும்.
இளமையில் கண் தொடர்பான பிரச்சினைகள் வராமல் தடுக்க குடைமிளகாய் உதவுகிறது.
குடைமிளகாயில் உள்ள “வைட்டமின் சி’ கூந்தலின் ஆரோக்கியத்தை பராமரித்து, கூந்தலின் நுனியில் பிளவு ஏற்படுவதை தடுக்கிறது.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் குடைமிளகாயை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் சர்க்கரை அளவு குறையும்.