கேரட் சாறு குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் ஆரோக்கியம் அளிக்கின்ற பானம். கண்களுக்கு வலிமையை தரும். இதை பச்சையாகவும் சாப்பிடலாம். சமைத்தும் சாப்பிடலாம். கேரட் சாப்பிடுவதால் உணவு நன்கு செரிமானம் ஆகும்.
சாப்பாட்டுக்கு பிறகு, ஒரு கேரட்டை மென்று தின்றால் கேடு விளைவிக்கக் கூடிய கிருமிகள் அழிந்துவிடும். ஈறுகளில் ரத்தம் கசிவதை தடுக்கும். பற்கள் சுத்தமாகி பற்சிதைவை தடுக்கும்.
சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை உள்ளவர்கள் கேரட்டை தாராளமாகச் சாப்பிடலாம். கேரட் சூப் குடிப்பதால் வயிற்றுப்போக்கை குணப்படுத்த முடியும்.
ஒரு டம்ளர் கேரட் சாறுடன் சிறிது ஏலக்காய் பொடி, பனங்கற்கண்டு சேர்த்து காலையில் குடித்துவர உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு ஏற்படும். உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது.
ஒரு தேக்கரண்டி அளவு கேரட் விதை எடுத்து, அதை பசும்பாலில் வேகவைத்து பருகினால், பிரசவித்த பெண்களுக்கு தாய்ப்பால் பெருகும். மாதவிடாய் சீராகும். சிறுநீர்ப்பாதையில் அடைப்பு உள்ளவர்கள் கேரட் சாறுடன் பாலும், தேனும் கலந்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
உலர்ந்த சருமம் இருப்பவர்கள் கேரட் சாறுடன் தேன் அல்லது ஆலிவ் ஆயில் சேர்த்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் சருமத்துக்கு தேவையான சத்து கிடைக்கும்.
கொலஸ்ட்ராலை குறைக்க கூடிய நார்ச்சத்துகள் இதில் அதிகம் உள்ளது. கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் கண் பார்வையை வலுவாக்குகிறது. வாரத்திற்கு மூன்று முறை காரட் சாப்பிடுவதால் மாலைக்கண் நோய் வராமல் தடுக்கலாம்.
பால் பிடிக்காத குழந்தைகளுக்கு கேரட் மில்க் ஷேக் செய்து கொடுக்கலாம். இதில் கால்சியம் இருப்பதால் எளிதில் ஜீரணமாகும். வாயுத் தொல்லையால் அவதிப்படுவர்களுக்கு கேரட் ஜுஸ் மிகவும் நல்லது.
கேரட் சாப்பிட்டால், இன்சுலின் அளவு அதிகமாக சுரக்கும். இவ்வாறு சுரப்பது நீரழிவு நேயாளிகளுக்கு நல்ல பயனை தரும்.
தினமும் ஒரு கேரட் என்ற அளவில் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் குறைவதோடு, சருமமும் பளபளப்பாக மாறும்.
மூலம், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் போன்ற பல்வேறு விதமான நோய்களுக்கு கேரட் சிறந்த நிவாரணியாக செயல்படும்.
ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்க உதவும் இந்த கேரட், புற்று நோய் வராமலும், இதய நோய்களையும் தடுக்க உதவும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.