காலிபிளவரில் செய்யப்படும் உணவுகள் சுவையாகவும் மணமாகவும் இருக்கும். அதில் உள்ள சத்துக்கள் என்ன? உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இதில் பார்ப்போம்.
காலிபிளவரில் மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், நார்ச்சத்து, வைட்டமின்கள் அதிகம் உள்ளது. இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை நீக்கி செரிமான கோளாறுகளை சரி செய்யும்.
புற்றுநோய்
காலிபிளவர் புற்று நோய் ஏற்படாமல் தடுக்கும் சக்தி உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. காலிஃப்ளவரில் சல்போரபேன் என்ற வேதிப்பொருள் அதிகமாக உள்ளது. இது புற்று நோய்களின் செல்களின் அடிப்படை வளர்ச்சியை அழிக்கிறது.
இதய ஆரோக்கியம்
காலிபிளவரில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளதால் இது ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும். இதனால் இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவுகிறது.
மூட்டு வலி
மூட்டு வலியை குறைப்பதில் காலிபிளவர் முக்கிய பங்கு வகிக்கிறது. மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் போன்றவை இருப்பதால் இதில் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது.
மூளை வளர்ச்சி
காலிபிளவர் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. காலிபிளவரில் உள்ள ஊட்டச்சத்துகள் அனைத்தும் உடலுக்கு உன்னதமான மருந்தாகிறது.