அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு சில பொருட்களில் ஒன்று பாலாடைக்கட்டி. இந்த உணவு பொருளில் உள்ள பல்வேறு விதமான சத்துக்கள் நம் அன்றாட வாழ்க்கைக்கு மிகவும் அத்தியாவசியமானது. அவற்றைப் பற்றி இந்த கட்டூரையில் தெளிவாக பார்க்கலாம்.
பாலடைக்கட்டியில் உள்ள சத்துக்கள்:-பாலாடைக்கட்டியை காலையில் சாப்பிட்டு விட்டால், நீண்ட நேரத்திற்கு பசியை தாங்க முடியும். காரணம் என்னவென்றால், அதில் அதிக அளவிலான கொழுப்பு சத்துக்கள் உள்ளது. கொழுப்பு சத்துக்கள் பொதுவாகவே தாமதமாக ஜீரணமாகும். இதனால் பசி எடுப்பதற்கான நேரம் அதிகரிக்கும்.
பாலடைக்கட்டியை காலை நேரத்தில் சாப்பிட்டால், அது மிகவும் உற்சாகத்தை உடலுக்கு ஏற்படுத்தும். இதன்காரணமாக, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.
100 கிராம் பாலாடைக்கட்டி அன்றாட கால்சியம் அளவில் 25 சதவீதத்தையும், வைட்டமின் ஏ தேவையில் 22 சதவீதத்தையும் பூர்த்தி செய்துவிடும்.
உடல் எடையை குறைப்பதற்கு பாலடைக்கட்டி உதவும் என்று சில மருத்துவர்களும், உடற்பயி;ற்சி வல்லுனர்களும் தெரிவித்துள்ளனர். அதாவது, கலோரிகளின் அளவை குறைப்பதற்கு பாலாடைக்கட்டி பயன்படும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், வெறும் பாலாடைக்கட்டியை சாப்பிட்டால் மட்டும் உடல் எடை குறையாது. அதற்கு தகுந்தார்போல் உடற்பயிற்சியையும் மேற்கொள்ள வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
பற்கள் மற்றும் எலும்புகளின் உறுதித் தன்மையை மேம்படுத்தும் கால்சியத்தின் அளவு, பாலாடைக்கட்டியில் அதிகமாக உள்ளது.
இத்தகைய சத்துக்கள் கொண்ட இந்த பாலாடைக் கட்டியை தினமும் 100 கிராம் என்ற அளவில் எடுத்துக் கொண்டால், நலமான வாழ்வை வாழ முடியும்.