சூயிங்கம் மெல்லுவது நல்லதா? கெட்டதா?

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சூயிங்கம் மெல்லும் பழக்கம் இருக்கிறது. சர்க்கரையை பயன்படுத்தி தான் அனைத்து சூயிங்கம் தயாரிக்கப்படுகிறது. இதில் சர்க்கரை நோயாளிகள் சாப்பிட கூடாது என்பதற்காக சுகர் ஃப்ரி சூயிங்கம் தயாரிக்கப்படுகிறது.

நன்மைகள் என்ன?

சூயிங்கம் சாப்பிடுவது உடலுக்கு சில நன்மைகளையும் தருகிறது. வயிறு நிறைய சாப்பிட்ட பிறகு இதை மெல்லுவதால் உமிழ் நீர் சுரக்கும். இதனால் உணவு செரிமானம் ஆவதற்கு துணைபுரியும். இது இரைப்பைக்கும் ஜீரணத்திற்கும் நல்லது.

வாய் நாற்றம் இருப்பவர்கள் சூயிங்கம் சுவைத்தால், சுவாசப் புத்துணர்ச்சியும் கிடைக்கும்.

சூயிங்கம் மெல்லுவதால் மூளையின் நினைவாற்றல் பகுதி எப்போதும் தூண்டப்படுவதாக ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு வீரர்கள் களத்தில் நிற்கும் போது பதற்றத்திற்கு மன அழுத்தத்திற்கும் உள்ளாகி விடுவார்கள். அந்தநேரத்தில் சூயிங்கம் மெல்லுவதால் மனம் அமைதியாகும். மேலும் ஈறுகளுக்கு ரத்த ஓட்டம் தரும் பயிற்சியாக அமையும்.

தீமைகள் என்ன?

அதிகளவு சூயிங்கம் மெல்லுவது உடலில் பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கும். சூயிங்கத்தில் இருக்கும் சர்க்கரையால் பல் இடுக்குகளில் உள்ள பாக்டீரியாக்கள் வேகமாக வளரும். மேலும் பற்சிதைவை உருவாக்கும்.

அடிக்கடி மெல்லுபவர்களுக்குத் தாடை மூட்டுகள் விரைவில் தேய்ந்துவிடும்.

குழந்தைகளுக்கு இதனை கொடுக்காமல் இருப்பது நல்லது. குழந்தைகள் அல்லது சிறுவர்கள் தெரியாமல் சூயிங்கத்தை விழுங்கிவிட்டால் அது உணவுக்குழாயில் ஒட்டிக்கொள்ளும். பிறகு மூச்சுவிட சிரமம் ஏற்படும். உலக அளவில் சில குழந்தைகளின் உயிரிழப்புக்கு இதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கிறது.

Recent Post

RELATED POST