தேவையானவை
சிக்கன் | 1கிலோ |
பச்சரிசி | 300 கிராம் |
தயிர் | அரை கப் |
முந்திரிப்பருப்பு | 60கிராம் |
ஏலக்காய், லவங்கம் | தலா 8 |
முந்திரிப்பருப்பு | 60கிராம் |
வெங்காயம் | 3 |
மிளகு | 3 |
தேங்காய்ப்பால் | 2கப் |
பட்டை | சிறிதளவு |
நெய், உப்பு | தேவையான அளவு |
செய்முறை:
சிக்கனை சிறிய துண்டுகளாக நறுக்கி சுத்தம் செய்து கொள்ளவும். வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும், இரண்டு வெங்காயத்தை நறுக்கிப்போட்டு, பொன்னிறமாக வதக்கவும். பிறகு சிக்கன் துண்டுகளைச் சேர்த்து கிளறி, சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்துக்கொள்ளவும்.
அகலமான பாத்திரத்தில் மீதமுள்ள ஒரு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு, மிளகு, உப்பு, தயிர், அரிசி ஆகியவற்றைச் சேர்த்து தேவையான நீர் ஊற்றி வேகவிடவும். அரிசி பாதியளவு வெந்ததும் சிக்கன் துண்டுகளை அதில் கொட்டி, மேலும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி தட்டால் மூடி வேகவிடவும்.
அரிசியும், சிக்கன் துண்டுகளும் நன்றாக வேகும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும். வாணலியில் நெய் விட்டு முந்திரிப்பு, நறுக்கிய வெங்காயம் சிறிதளவு சேர்த்து, சாதத்துடன் சேர்த்து கிளறவும். 10 நிமிடங்கள் கழித்து பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி சூடாக பரிமாறவும்.