சின்னம்மை நோய் வராமல் தடுப்பது எப்படி

சின்னம்மை நோய் பெரும்பாலும் 10, 12 வயதிற்குட்பட்டவர்களையே பெரும்பாலும் பாதிக்கும். இந்நோய் ஒருமுறை தாக்கினால் வாழ்நாள் முழுவதும் எதிர்ப்பு சக்தி நீடிக்கிறது. ஆனால் முதல்முறையாக 25 வயதில் வரும் பொழுது நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

ஆனால் இரண்டாம் முறை இந்நோய் வருவது மிகவும் அரிது இதனை தோற்றுவிக்கும் நுண்ணி அக்கி நுண்ணிகளின் வகையை சேர்ந்தது. இது மூச்சு காற்று மூலம் பரவுகிறது அல்லது கொப்புளங்கள் சிதைவுற்று வெளிவரும் நீர், தோலில் படும் போதும் பரவும்.

“அக்கி என்ற பெயரை சிலர் சொல்ல மாட்டார்கள். இதற்கு பெயர் சொல்ல மருந்து என்றும், குயவரிடம் சென்று உடலில் எழுதுவதும் இன்றும் பழக்கத்தில் உள்ளது ”

Advertisement

நுண்ணி உடலில் நுழைந்து 14 – 21 நாட்கள் வரை உள்ளுரை பருவம் (incubation period ) நீடிக்கிறது. லேசான காய்ச்சல், தலைவலி மேலும் தோலில் தடிப்பும் சிவப்பும் தோன்றும், மேலண்ணத்தில் முதலில் கொப்புளங்கள் தோன்றி பிறகு முகம், கை, கால்களுக்கு பரவுகிறது.

உடலில் மிகவும் அடர்ந்து காணப்படும் நோய்த் திட்டுகள், கை கால்களில் சற்று குறைவாகவே இருக்கும். மேலும் 24 மணி நேரத்திற்குள் நீர்க் கொப்புளங்களின் உள்ளே சீழ் தோன்றும். ஆடை உரசுவதால் கூட அவை சிராய்ப்புறும், பிறகு சொறியும் போது கூட கொப்புளம் காயம்படும். இதனால்தான் பெரியவர்கள் சொறியதே, வேப்பிலையால் வருடு என்று கூறுவார்கள்,

சிகிச்சை

இதற்க்கென்று தனிப்பட்ட சிகிச்சை ஏதும் இல்லை. ஆனால் கடுமையாக பாதிக்கப்பட்டவருக்கு அசைக்ளோவிர் (Acyclovir) என்ற மாத்திரைகள் பயனளிக்கும். மேலும் நுண்கிருமிகள் தாக்காமல் பாதுகாக்க நுண்ணியிர் கொல்லி தேவைப்படும்.

தடுப்பு முறைகள்

வருமுன் காப்பதற்காக சின்னம்மை தடுப்பூசி ஒரு வார இடைவெளியில் இரண்டு ஊசிகள் போடலாம், ஊசியின் விலை ரூ.1400/- வரை ஆகும். ஒருமுறை அம்மை வந்தவருக்கு எதிர்ப்பு சக்தி இருக்கும், தடுப்பூசி தேவை இல்லை.

மேலும் ஆஸ்துமா, இரத்தபுற்று போன்ற நோய்களுக்கு மருந்து எடுப்போருக்கு சின்னம்மை நோய் மிகவும் கடுமையாக இருக்கும். மருத்துவரின் ஆலோசனை பெற்று மருந்து எடுக்கலாம்.

தடுப்பூசி உடலில் தனது வேலையை தொடங்க குறைந்தது ஒரு மாதம் காலம் ஆகும். அதற்கு முன் நுண்ணுயிர் நுழைந்து இருந்தால் தடுப்பூசி வேலை செய்ய காலம் இருக்காது.

சின்னமைக்கு மாத்திரை ஊசி போடும் பொழுது சிலர் சாமி குத்தம் என்று சொல்வார்கள், பயம் வேண்டாம் சாமியை வேண்டி கொண்டு சிகிச்சையை மேற்கொள்ளலாம்.