ஆபிசில் தூங்கிய ஊழியர்…பணிநீக்கம் செய்த நிறுவனத்திற்கு அபராதம்..!!

சீனா நாட்டின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள டாய்க்சிங் [Taixing] நகரில் இயங்கி வரும் கெமிக்கல் நிறுவனத்தில் ஜாங் [Zhang] என்ற நபர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை பார்த்து வந்துள்ளார். 

நள்ளிரவு வரை வேலை இருந்ததால் அவர் ஆபீசில் உள்ள மேஜையிலேயே ஒரு மணி நேரம் வரை குட்டித் தூக்கம் போட்டுள்ளார். இதனை சிசிடிவி கேமராவில் பார்த்த அதிகாரிகள் அந்த நபரை பணிநீக்கம் செய்துள்ளனர்.

தன்னை பணியிலிருந்து நீக்கியது நியாயமற்ற செயல் என கூறி அந்த நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ‘ஜாங்கின் அந்த நிறுவனத்துக்கு 20 வருடங்களாக உழைத்துள்ளார். அவருக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் வழங்க விரும்பாததால் அவரை நிறுவனம் பணிநீக்கம் செய்ததாகத் தெரிகிறது. எனவே இது நியமற்றது என கூறிய நீதிமன்றம், ஜாங்கிற்கு 350,000 யுவான் [ரூ. 41.6 லட்சம்] இழப்பீடு வழங்குமாறு நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Recent Post

RELATED POST