கரப்பான் பூச்சி பல நோய்களை பரப்புகின்றன என்று பத்திரிக்கைகள் குறிப்புகளை வெளியிட்டு வருகின்றன, ஆனால் அதே கரப்பான் பூச்சியை நோய் தீர்க்கும் அரிய மருந்தாக விளங்கிறது.
ஆம், பிராங்கியல் ஆஸ்துமா நோயளிக்கு அதிலும் குறிப்பாக மூச்சு திணறல் இடைவிடாமல் மேல் – கீழ் மூச்சு இவற்றால் அவதியுறும்போது இன்னல்களை உடனே அகற்றும் நண்பனாக தனது உதவியினைச் செய்கிறது.
1896 ஆம் ஆண்டு, ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஆங்கில மருத்துவத்தில் எம்.டி. பட்டம் பெற்ற டாக்டர் சாமுவேல் கிருஸ்டியன் பிரட்ரிக் ஹானிமென் அவர்களால் உலகுக்கு அறிமுகம் செய்யப்பட்ட சிம்லியா சிமிலிபுஸ் க்யூரென்டர் அதாவது ஒத்தவைகள் ஒத்தவைகளால் குணமடையும் என்ற தத்துவத்தை மையமாகக் கொண்டு பயன்பட்டுவரும் ஒமியோபதி மருத்துவ முறையில் கரப்பான் பிராங்கியல் ஆஸ்துமாவின் மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பிளாட்டா ஒரியன்லிஸ் என்பது கரப்பானிலிருந்து தயாரிக்கப்படும் ஒமியோபதி மருந்து. ஆஸ்துமா சம்பந்தமான உபாதைகள் அதிகரித்த நோயாளி பரிதாபமாக மூச்சுத் திணறலில் சிக்கலுற்று திக்காடும்போது பிளாட்டா ஒரியன்டாலிஸ் தாய் திரவத்தை 15 முதல் 20 சொட்டுகள் நான்கு டீஸ்பூன் வெந்நீரில் கலந்து கொடுக்கும்போது ஆங்கில மருத்துவத்தில் ஊசி போட்டுத்தான் தணிக்க முடியும் என்ற நிலையிலுள்ள மூச்சுத் திணறலைக்கூட ஊசி இன்றி ஹோமியோபதியில் கரப்பான் மூலம் எளிதில் தணிக்காலம்.
Status Astmaticus என்ற நாள்ப்பட்ட மற்றும் கட்டுகடங்காத ஆஸ்துமாவைக்கூட பிளாட்டா மட்டுப்படுத்தக் கூடிய ஆற்றல் பெற்றுள்ளது.