காபி அதிகம் குடிப்பவரா நீங்கள்? அப்படின்னா இதை படிங்க

காபியில், கெஃபைன் (caffeine) என்னும் வேதிப்பொருளும் பொட்டாசியம், மாங்கனீஸ் போன்ற தாதுக்களும் இருக்கு. அதே போல பி காம்ப்ளெக்ஸ், ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது.

காபி, வளர்சிதை மாற்றத்தையும் , குடல் அசைவுச் (Bowel Movement) செயல்பாடுகளைய அதிகரிக்க செய்கிறது . குடல் அசைவு அதிகரிப்பதால் மலம் எளிதாக வெளியேறி வயிறு சுத்தமாகிறது. ரத்த நாளங்களைச் சுருங்கச் செய்யும் தன்மை இருப்பதின் காரணமாக, பல வலி நிவாரண மாத்திரைகளிலும் கெஃபைன் சேர்க்கப்படுகிறது.

இதுதவிர, (Alzheimer), (Parkinson’s disease – PD), இதயநோய், சர்க்கரை நோய் மற்றும் கல்லீரல் நோய்களைத் தடுக்கும் ஆற்றலும் காபிக்கு உண்டு என்றுஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன. தினமும் ஒரு கப் காபி குடித்தால் 7 சதவீத சர்க்கரை நோய் பாதிப்பு குறைகிறது.

தினமும் 4 கப் காபி குடிப்பதால் நுரையீரல் கோளாறு வராமல் தவிர்க்கப்படுகிறது, இதேப்போல் மனஅழுத்தம் 20 சதவீதமும், தற்கொலை எண்ணம் 53 சதவீதமும் குறைகிறது.

தினமும் 2 கப் காபி குடிப்பதால் நுரையீரல் புற்றுநோய் வராமல் தவிர்க்கப்படுகிறது. ஆனால் அதிக அளவில் காபி அருந்துவதும் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும்.

காபியை அதிகமாக உட்கொள்ளும்போது, பொட்டாசியம் அளவு அதிகரித்துப் உடலில் பல்வேறு பாதிப்புகளை உண்டாக்கும். ரத்தத்தில் பொட்டாசியம் அளவு அதிகரித்தால், Hyperkalemia, சிறுநீரகப் பிரச்னைகள் வரும் வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளதால் அளவாக காபி குடிப்பது உடலுக்கு நல்லது.

எப்போது காபி குடிக்கலாம்?

காலையில் எழுந்ததும் குடிக்கலாம். சிலருக்கு காபி குடித்தால் தான் மலம் எளிதாக கழிப்பார்கள். உணவு சாப்பிடுவதற்கு சற்று நேரத்திற்கு முன்போ, பின்போ குடிக்கக் கூடாது. குறைந்தபட்சம் ஒரு மணி நேர இடைவெளி விட்டு காபி குடிக்கலாம். தூங்குவதற்கு முன்பாகக் காபி குடிக்கக் கூடாது. மாத்திரைகளின் வீரியத்தைக் காபி குறைத்துவிடும் என்பதால் எந்த மாத்தரைகளையும் காபியுடன் சாப்பிடக்ககூடாது.

Recent Post

RELATED POST