காபி அதிகமாக குடிக்கும் பெண்களே..? இது உங்களுக்கான பதிவு..!

முன்னுரை:-

அதிகமாக காபி குடித்தால் பெண்களுக்கு என்னென்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

விளக்கம்:-

முகப்பருக்கள் என்பது முகத்தை பாதிக்கும் ஒரு சில காரணிகளில் ஒன்றாகும். எப்போதும் பளிச்சிடும் வகையிலான முகச் சருமத்தை தான் பெண்கள் விரும்புவார்கள்.

ஆனால், தற்போது ஏற்பட்டிருக்கும் கால மாற்றங்கள், வெப்பம், உடலில் ஹார்மோன்களின் மாற்றம் என்று பல்வேறு விஷயங்களும் முகப்பருக்கள் காரணமாகிறது.

இதோடு சேர்த்து, அதிகமாக காபி குடித்தாலும் முகப்பரு வருமாம். ஆம், அது உண்மை தான் அதைப்பற்றி தற்போது பார்ப்போம்.

காபியும், முகப்பருவும்:-

காஃபியில் உள்ள வேதிப் பொருட்கள் மன அழுத்தம் ஏற்படுத்தும் ஹார்மோன்களை தூண்டிவிடுகிறது. அதுவே தேவையற்ற கலோரிகளை உடலில் சேரவும் வழிவகுத்து முகப்பருவுக்கு காரணமாகிவிடுகிறது.

தேவையற்ற முகப்பருக்களை தவிர்க்க, நீங்கள் பருகும் காஃபியின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும். இதுமட்டுமின்றி, உடலில் உள்ள நீர்சத்தின் அளவை பொறுத்தும் சரும பிரச்சனைகள் தடுக்கப்படுகிறது.

காபி நீரின் அளவை அதிமாக வெளியேற்றுவதாலும், சருமப்பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் இருக்கிறது. எனவே அளவோடு காபியை அருந்தினால், அனைத்தும் சுபமே..

Recent Post

RELATED POST