சளி தொல்லையை நீக்கும் வீட்டு மருந்துகள்

சளியும் இருமலும் வந்துவிட்டால் உடலில் வெப்பம் அதிகரித்து காய்ச்சலாகவும் மாறிவிடும். பருவநிலை மாறும்போது இவை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதனை சரி செய்ய எளிய வழிகள் என்ன என்பதை இதில் பாப்போம்.

  • மிளகை நன்றாக தூள் செய்து அதனுடன் சிறிது வெல்லம் மற்றும் நெய் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் சளித்தொல்லை நீங்கும்.
  • சளித்தொல்லை அதிகமாக உள்ளவர்கள் ஒரு ஸ்பூன் அளவு மிளகை எடுத்து அதனை நெய்யில் வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் மூன்று வேலை அரை ஸ்பூன் அளவு பொடியை சாப்பிட்டு வந்தால் சளித்தொல்லை நீங்கும்.
  • மிளகை நன்றாக தூள் செய்து அதை தேனில் கலந்து தினமும் மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் சளித்தொல்லை, மூக்கு ஒழுகுதல் போன்ற பிரச்சனைகள் நீங்கும்.
  • இஞ்சி சாறில் தேன் கலந்து கொடுத்து வந்தால் இருமல், மார்புச்சளி, தொண்டை வலி, மூக்கு ஒழுகுதல், மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகள் குணமாகும்.
  • தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுட வைத்து ஆரிய பிறகு அதனை நெஞ்சில் தடவி வந்தால் நெஞ்சு சளி கரையும்.
  • கொள்ளு பருப்பை சூப் செய்து குடித்தால் சளி முற்றிலும் நீங்கும். கற்பூரவள்ளி இலையில் சாறு எடுத்து குடித்து வந்தால் சளி குணமாகும்.
  • தூதுவளைக் கீரையை நன்றாக சுத்தம் செய்து துவையலாக அல்லது ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால் சளி குணமாகும்.
  • ஓமம் பொடி 10 கிராம், மஞ்சள் பொடி 20 கிராம், பனங்கற்கண்டு 40 கிராம், மிளகு பொடி 10 கிராம் இவை அனைத்தையும் சூடான பசும்பாலில் கலந்து 5 கிராம் அளவிற்கு காலை மாலை என இருவேளை குடித்து வந்தால் சளித்தொல்லை நீங்கும்.
  • ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் தண்ணீரில் போட்டு நன்றாக காய்ச்சி அதனுடன் பால் சர்க்கரை சேர்த்து காலை மாலை என இருவேளை சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
  • ஓமத்தை தூள் செய்து ஒரு துணியில் கட்டி அதனை அடிக்கடி முகர்ந்து வந்தால் மூக்கடைப்பு விலகும்.
  • ஒரு தேக்கரண்டி ஏலக்காய் பொடியுடன் நெய் கலந்து சாப்பிட்டு வந்தால் மார்புச்சளி நீங்கும்.
  • சூடான பாலில் மஞ்சள் சேர்த்துப் பருகுவது சளியைப் போக்கும்.

Recent Post

RELATED POST