மழை காலங்களில் இருமல், தும்மல், சளி, காய்ச்சல், தொண்டைப் புண் போன்ற பல பிரச்சனைகள் அடிக்கடி ஏற்படும். இதனை தடுக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒருசில இயற்கை வைத்தியங்களை முதலில் முயற்சி செய்து பாருங்கள்.
சளி பிடித்திருக்கும் போது வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு, நெல்லிக்காய், எலுமிச்சை போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். இவை சளி, மற்றும் இருமலுக்கு காரணமான வைரஸ்களை எதிர்த்துப் போராட உதவும்.
சளி, இருமல் பிரச்சனைகளின் போது ஆவி பிடிப்பதால் சுவாசப் பாதையில் உள்ள சளியை இளகச் செய்து, இப்பிரச்சனைகளில் இருந்து உடனடி நிவாரணத்தை அளிக்கும். நன்கு கொதிக்க வைத்த நீரில், சிறிது யூகலிப்டஸ் எண்ணெயை சேர்த்து ஆவி பிடிக்க வேண்டும்.
தேன் இயற்கை மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் முக்கியமான பொருளாகும். தொண்டை கரகரப்பு, தொண்டைப் புண் ஆகியவற்றால் அவதிப்படுபவர்கள், தேனை உட்கொண்டு வந்தால், உடனடி நிவாரணத்தைப் பெறலாம்.
மூலிகை டீ, கசாயம் போன்றவற்றை அடிக்கடி தயாரித்து குடியுங்கள். இது சளியைக் கரைத்து வெளியேற்றுவதோடு, விரைவில் சளி, இருமலில் இருந்து விடுவிக்கும்.