எனக்கு பொண்ணு கிடைச்சிருச்சு.. 2 அடி உயர நபருக்கு குவியும் பாராட்டுகளும், வாழ்த்துகளும்..!

உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் 2 அடி உயரமுள்ள அசிம் மன்சூரி, இவர் கைரானா பகுதியில் துணிக்கடை ஒன்றை தனது சகோதரருடன் இணைந்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது உயரத்தை காரணம் காட்டி திருமணம் செய்ய பெண் கிடைக்காததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்.

பள்ளிப்படிப்பு படிக்கும் போதிலிருந்து இன்றைய வரையிலும் பல அவமானங்களை சந்தித்துள்ளார். தற்போது இவருக்கு 21 வயதாகிறது இதனால் அவரவது பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர்.

UP 2 feet tall man found bride after 5-year-long quest

கடந்த 5 வருடங்களாக இவருக்கு எந்தவொரு பெண்ணும் அமையாமல் இருந்தது. இதனால் பல பேரிடம் பெண் பார்த்து தருமாறு கடிதம் போட்டு, மனு கொடுத்துள்ளார்.

அந்த வகையில் இந்த 2 அடி உயரமுள்ள அசிம் மன்சூர், பெண்கள் காவல் நிலையத்திலும் திருமணத்திற்கு பெண் தேடி தாங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

UP 2 feet tall man found bride after 5-year-long quest

வைரலான பின் அசிம் மன்சூரியை திருமணம் செய்ய பல பெண்கள் விருப்பம் தெரிவித்தனர். அந்த பெண்கள் பட்டியலில் உத்திரபிரதேச மாநிலம் ஹன்பூர் பகுதியை சேர்ந்த புஷ்ரா என்ற பெண்ணை திருமணம் செய்துகொள்கிறேன் என்று தேர்ந்தெடுத்துள்ளார்.

UP 2 feet tall man found bride after 5-year-long quest

சமீபத்தில் இருவரும் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் செய்தும் உள்ளனர். அவரது உயரத்திற்கு ஏற்ற மணபெண் கிடைத்தது மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது என்று அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.இதனால் பலரும் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.