கான்டாக்ட் லென்ஸை பாதுகாப்பது எப்படி?

கான்டாக்ட் லென்ஸ் அணியும் முன்பும் கண்களிலிருந்து அகற்றுவதற்கு முன்பும் கைகளை நன்றாக சோப் மற்றும் தண்ணீர் பயன்படுத்தி சுத்தமாக கழுவ வேண்டும்.

கான்டாக்ட் லென்ஸ் கை தொடும் முன்பு கைகளை ஒரு டவல் அல்லது டிஷ்யூ பேப்பர் கொண்டு ஈரம் போக துடைத்துக்கொள்ள வேண்டும்.

கான்டாக்ட் லென்ஸ்களை கூட்டல் குறி அமைப்பில் மெதுவாக தொட்டு எடுக்க வேண்டும். வட்ட அமைப்பில் அழுத்தி எடுக்கக் கூடாது.

கான்டாக்ட் லென்ஸ் உடன் வழங்கப்பட்ட திரவத்தினை அதற்கான டப்பியில் ஊற்றி அதில் கான்டாக்ட் லென்ஸ் மூழ்க வைத்து தினசரி இரண்டு முறை சுத்தம் செய்ய வேண்டும்.

கான்டாக்ட் லென்ஸினை பாதுகாக்கும் டப்பியினை வாரம் இரண்டு அல்லது முறை அந்த திரவத்தினை பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும்.

கான்டாக்ட் லென்ஸினை பாதுகாக்கும் டப்பியினையும் பராமரிக்கும் திரவத்தினையும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாற்றிவிட வேண்டும்.

கான்டாக்ட் லென்ஸினை அணியும் நேரத்தை படிப்படியாக அதிகரிக்க வேண்டும்.

கான்டாக்ட் லென்ஸ் அணிந்திருக்கும் போது பொதுவாக தூங்குவது குளிப்பது, முகம் அலம்புவது கூடாது.

நீரால் ஆன (Water based) மேக் அப் பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். எண்ணெய்ப் பொருட்களால் ஆன மேக்கப் பொருட்கள் பயன்படுத்தக் கூடாது.

கான்டாக்ட் லென்ஸ் பராமரிப்பு திரவம் இருக்கும் பெரிய பாட்டிலிலிருந்து வேறு சிறிய பாட்டிலுக்குத் திரவத்தை மாற்றக்கூடாது. அப்படி செய்வதால் அந்த திரவத்தில் தொற்று (Infection) ஏற்பட வாய்ப்பு இருக்கிறது கான்டாக்ட் லென்ஸ் அணியும் முன்பும் அகற்றும் முன்பும் கைகளை சுத்தம் செய்ய க்ரீமி சோப்புகளை பயன்படுத்த கூடாது.

கான்டாக்ட் லென்ஸ் களை கடினமாக கையாளக் கூடாது. மென்மையாக கையாள வேண்டும். கான்டாக்ட் லென்ஸ்களை சுத்தம் செய்யும் போது அதற்கான டப்பியில் பழைய பராமரிப்பு திரவத்தோடு புதிய பராமரிப்பு திரவத்தை கலக்கக்கூடாது.

கான்டாக்ட் லென்ஸ் பராமரிப்பு திரவம் உள்ள பாட்டிலின் வாய்ப்பகுதியினை கைகளால், விரல்களால் தொடாதீர்கள். கான்டாக்ட் லென்ஸ் அணிந்து நெருப்பின் அருகில் செல்ல வேண்டாம்.

Recent Post

RELATED POST