கொரோனா சிகிச்சை தரும் தனியார் மருத்துவமனைகளுக்கு முதல்வர் எச்சரிக்கை

கொரேனாவை தடுக்கும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவ்வாறு, முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தின்கீழ் தனியார் மருத்துவமனைகள் கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

edappadi-palanisamy Tamil news

தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு விதித்த உத்தரவுகள் பின்வருமாறு…

  • லேசான அறிகுறி மற்றும் அறிகுறி இல்லாதவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கட்டணம்
  • அனைத்து வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவுக்கு ஒரு நாளைக்கு 9,000 முதல் 15,000 வரை கட்டணம்
  • 25% படுக்கைகள் முதல்வர் காப்பீடு திட்டத்திற்க்காக ஒதுக்க வேண்டும்
  • முதல்வரின் காப்பீடு திட்ட பயனாளிகள் தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டாம்.
  • நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு மேலாக வசூலித்தால் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
  • மருத்துவமனைகள் மீது முதல்வரின் காப்பீடு திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.

மேலும் தொடர்புக்கு 1800 425 3993 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த புதிய அறிவிப்பு முதல்வர் காப்பீடு திட்டத்தின்கீழ் ஏற்கனவே பதிவு செய்தவர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.