இரவு நேரத்தில் தொல்லை கொடுக்கும் இருமல்….சரி செய்வது எப்படி?

குளிர்காலத்தில் இருமல் வருவது சகஜமான ஒரு விஷயம் தான். இந்த இருமல் ஒரு சிலருக்கு பகல் நேரத்தில் இருக்கும். சிலருக்கு இரவு நேரங்களில் இருக்கும். இதனால் அவர்களால் நிம்மதியாக தூங்க முடியாது. இப்படி இரவு நேரங்களில் தொல்லை கொடுக்கும் இருமலை எப்படி சரி செய்வது என்பதை இதில் பார்ப்போம்.

இரவு நேரங்களில் இருமல் தொல்லை இருந்தால் நீங்கள் வெதுவெதுப்பான நீரை அருந்தலாம். இது உங்கள் தொண்டையை மென்மையாக வைத்திருக்க உதவும். வெதுவெதுப்பான நீரில் தேன் மற்றும் இஞ்சியை சேர்ப்பது இன்னும் சிறந்தது.

இருமல் மிகவும் மோசமாக இருந்தால், நீங்கள் தூங்கும் போது கூடுதல் தலையணையைப் பயன்படுத்தவும். இது உங்களுக்கு மிகவும் வசதியாக இருக்க உதவும்.

உங்களுக்கு ஒவ்வாமை காரணமாக இருமல் இருந்தால், தூசி மற்றும் புகை போன்ற தும்மலை உண்டாக்கும் விஷயங்களிலிருந்து விலகி இருப்பது நல்லது. காற்றை சுத்தமாக வைத்திருக்க ஏர் ப்யூரிஃபையர் இயந்திரத்தைப் பயன்படுத்தலாம். 

ஒரு வாரத்திற்கு மேலாக இருமல் இருந்தால் உடனடியாக மருத்துவரை சந்திப்பது நல்லது. ஏனென்றால் தொடர் இருமல் சில நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்.

Recent Post