சிறுநீர் பாதை தொற்றுகளை சரிசெய்யும் குருதிநெல்லி சாறு

குருதிநெல்லி பெர்ரி பழத்தின் குடும்பத்தை சேர்ந்தது. இந்த குருதிநெல்லியில் ஊட்டசத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. கலோரிகள் குறைவாக உள்ளது. இப்பழம் குளிர் பிரதேசங்களில் அதிகமாக கிடைக்கும். தற்போது அமெரிக்காவின் வடக்கு பகுதியிலிருந்து அதிகமாக மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

குருதிநெல்லியின் மருத்துவ குணங்கள்

குருதிநெல்லி சாறு சிறுநீர் பாதை நோய் தொற்றுகளை தடுக்கிறது. நோய்த் தொற்றுக்கு நல்ல மருந்தாகவும் இருந்து வருகிறது. மேலும் மலச்சிக்கல் பிரச்சனைக்கும் நல்ல மருந்தாக இருந்து வருகிறது.

குருதிநெல்லி மருத்துவ குணங்கள் கொண்டது என்று மருத்துவர்கள் யாரும் இன்னும் அங்கீகரிக்கவில்லை. இருப்பினும் குருதிநெல்லியை வைத்து பல ஆய்வுகள் நடத்தப்பட்டது. இதில் சாலிசிலிக் அமிலம் அதிகமாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது.

குருதிநெல்லி சாற்றை தினமும் குடித்தால் உடலில் சாலிசிலிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும். சாலிசிலிக் அமிலம் உடலில் உள்ள வீக்கத்தை குறைக்கும். மேலும் இரத்தக் கட்டியை தடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

உடல் நோய் மற்றும் வேறு பிரச்சனைகள் உள்ளவர்கள் குருதி நெல்லியை உட்கொள்வதற்கு முன் மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது மிக நல்லது.

குருதிநெல்லி சீறுநீர் நோய்த்தொற்றுகளை தடுப்பதில் பயனுள்ளதாக இருக்கும். குருதிநெல்லியை சாப்பிடும் போது நமக்கு ஏற்படும் உடல் மாற்றத்தை கவனித்து கொள்வது நல்லது.

குருதிநெல்லி எந்த வடிவில் இருக்கும்?

இவை பல்வேறு வடிவங்களில் கிடைக்கிறது. புதிய பழம், சாறு, காப்ஸ்யூல் ஆகிய மூன்று குருதிநெல்லியில் மிக முக்கியமான ஒன்று.

குருதிநெல்லி பக்க விளைவுகள்

சிறுநீரக கற்கள் இருந்தால் குருதிநெல்லி சாறை அதிகமாக குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

அதிகமாக உட்கொண்டால் வயிற்றுப்போக்கு ஏற்படும். இன்னும் அதிக பக்க விளைவுகள் ஏற்படக்கூடும். இது மாதிரி பக்கவிளைவுகள் வரும் போது மருத்துவரைத் தொடர்பு கொள்வது நல்லது.

Recent Post

RELATED POST