சீரகம் அதிகம் சேர்த்தால் கருச்சிதைவு ஏற்படுமாம்..!

பல நோய்களுக்கு மருந்தாக சீரகம் பயன்படுகிறது. குறிப்பாக ஜீரண மண்டலத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு சீரகம் மருந்தாக பயன்படுகிறது.

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு. அது போல தான் சீரகமும். அளவோடு எடுத்துகொண்டால் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும். அளவுக்கு மீறி எடுத்துக்கொண்டால் உடலுக்கு பல அபாயங்களை உருவாக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

கார உணவுகள் அனைத்திலும் சீரகம் பயன்படுத்தப்படுகிறது. சீரகம் சேர்ப்பதால் ஜீரண சக்தி அதிகரிக்கும். நச்சுக்களை வெளியேற்றும். வாயுவை குறைக்கும். இப்படி பல நன்மைகள் உள்ளன.

சாதாரணமாக சீரக தண்ணீர் குடிப்பது தவறில்லை. ஆனால் உடலில் உள்ள நோய்களுக்காக சீரகம் பயன்படுத்த நினைத்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகு எடுத்துக்கொள்ள வேண்டும்.

சீரகத்தை அதிகம் எடுத்துக்கொண்டால் நெஞ்செரிச்சல் உருவாகும். அடிக்கடி ஏப்பம் உருவாகும். அசிடிட்டி உள்ளவர்கள் சீரகத்தை தவிர்க்க வேண்டும்.

நீண்ட நாட்களாக சீரகத்தை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. சீரகத்தில் உள்ள எண்ணெய் எளிதில் ஆவியாவதே இதற்கு காரணம்.

கர்ப்பிணி பெண்கள் சீரகத்தை அதிகம் எடுத்துக்கொள்ள கூடாது. சீரகத்தை அதிகம் எடுத்துக்கொள்வதால் கருச்சிதைவு ஏற்படும் அபாயம் உள்ளது.

பெண்கள் மாதவிடாய் காலங்களில் சீரகத்தை அதிகம் சேர்த்துக்கொண்டால் அதிக ரத்தப்போக்கு ஏற்படும். எனவே அந்த நேரங்களில் சீரகத்தை தவிர்ப்பது நல்லது.

அதிகப்படியான சீரகம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும் என்பதால் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பவர்கள் சீரகத்தை குறைவான அளவை பயன்படுத்துங்கள்.

Recent Post