தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் சுற்றுலா சென்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டு வருகிறது.
நடராஜன் பல ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி பல சாதனைகளை படைத்தார். அதன் பின் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் அறிமுகமானார். அங்கு நெட் பவுலராக சென்ற நடராஜனுக்கு, அங்கு முன்னனி பவுலர்கள் காயத்தால் வெளியேறியதால் அந்த தொடரில் அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

அந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி அனைவரது கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார். அந்த தொடரில் நடராஜன், முகமது சிராஜ், மற்றும் வாஷிங்டன் சுந்தர் என பல இளம் வீரர்கள் அத்தொடரை விளையாடி வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தனர்.
இச்சாதனையை பார்த்த இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான ஆனந்த் மஷிந்திரா, அத்தொடரில் விளையாடிய 6 அறிமுக வீரர்களுக்கு காரை பரிசாக கொடுக்க முடிவு செய்தார். சொன்னது போல் அந்த 6 அறிமுக வீரர்களுக்கும் கார் பரிசாக வழங்கப்பட்டது.

நடராஜனுக்கு மஹிந்திராவின் புதிய மாடல் ஆன எஸ்.யு.வி கார் பரிசாக வழங்கப்பட்டது. ஆனால் அந்த காரை தற்போது நடராஜன், அவரது பயிற்சியாளரும், நல்ல நண்பருமான ஜெயபிரகஷ் என்பவருக்கு பரிசாக வழங்கி அழகு பார்த்துள்ளார்.
காரை பெற்றுக்கொண்ட ஜெயபிரகாஷ் தனது ஃ பேஸ்புக் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதனை பலரும் பார்த்து நடரானை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் நடராஜன் நண்பர்கள் மற்றும் மனைவியுடன் கொல்லிமலைக்கு சென்றார்.
அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நடராஜன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படத்திற்கு “ வாழ்க்கை என்பது நல்ல நண்பர்களும் சாகசங்களும் தான்” என caption ஒன்றையும் போட்டுள்ளார். இது ரசிகர் மத்தியில் பெரும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
