இன்றைய ராசி பலன் (புதன் கிழமை) – 12-08-2020

மேஷம்

கடுமையான முயற்சிகள் மூலம் நல்ல பலனை பெறலாம். சிறிது மனசோர்வு ஏற்படலாம். குடும்பத்தாரிடம் அமைதியாக நடந்துகொள்ளுங்கள். தேவையற்ற செலவுகள்ஏற்படலாம். ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.

ரிஷபம்

Advertisement

இன்று நீங்கள் செய்யும் வேளைகளில் கவனம் செலுத்த வேண்டும். பணிசூழலில் மந்தமான நிலை ஏற்படும். குடும்பத்தாரிடம் அமைதியாக நடந்துகொள்வது நல்லது. நிதிநிலைமை சுமாராக இருக்கும். பல்வலி ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

மிதுனம்

இன்று நீங்கள் சற்று பதட்டத்தோடு காணப்படுவீர்கள். பணிச்சுமை ஏற்படலாம். சக ஊழியர்களிடம் அமைதியாக நடந்து கொள்வது நல்லது. பண வரவும், செலவும் சேர்ந்தே காணப்படும். பதட்டம் காரணமாக செரிமான கோளாறு ஏற்படலாம்.

கடகம்

உங்களுக்கான வாய்ப்புகள் இன்று தேடி வரும். பணிச்சூழல் சிறப்பாக அமையும். பயணங்கள் ஏற்படும். குடும்பத்தில் நல்லிணக்கம் காணப்படும். பணவரவு மற்றும் ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.

சிம்மம்

இன்று நீங்கள் சிறப்பாக பணியாற்றுவீர்கள். வேலைகளை திருப்தியாக செய்து முடிப்பீர்கள். இதனால் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் நல்லிணக்கம் காணப்படும். பணவரவில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

கன்னி

இன்று நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். பணிச்சூழலியல் சற்று மந்தமாக காணப்படும். குடும்பத்தாரிடம் நல்லிணக்கம் ஏற்படும். பணவரவு மற்றும் ஆரோக்கியம் சுமாராகவே இருக்கும்.

துலாம்

இன்று நீங்கள் நம்பிக்கையோடு காணப்படுவீர்கள். வேலையில் சிறு பதட்டங்கள் உருவாகலாம். உங்கள் பணிகளை திட்டமிட்டு செய்து முடிக்க வேண்டும். பணவரவில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். வேலை செய்யும் இடத்தில் சிறு மாற்றங்கள் உருவாகலாம். பண வரவு மற்றும் செலவு சேர்ந்த காணப்படும். மன அழுத்தம் செரிமானக் கோளாறு ஏற்படலாம்.

தனுசு

இன்று நீங்கள் நம்பிக்கையோடு காணப்படுவீர்கள். உங்கள் பணிகளை திட்டமிட்டு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். பணவரவு சிறப்பாக காணப்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

மகரம்

மன அழுத்தம் காரணமாக கவனக் குறைவு ஏற்படலாம். இன்று நீங்கள் அமைதியாக இருக்க முயற்சி செய்ய வேண்டும். நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்காது. ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.

கும்பம்

நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். பணிச்சூழல் உங்களுக்கு சாதகமாக இருக்கும். குடும்ப உறவில் மகிழ்ச்சி நீடிக்கும். தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். பணிச்சுமை காரணமாக கால் வலி ஏற்படலாம்.

மீனம்

இன்று நீங்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். பணிச்சுமை அதிகமாக இருக்கும். உங்கள் பணிகளை திட்டமிட்டு செய்து முடிப்பீர்கள். நிதி நிலைமை மற்றும் ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.