இன்றைய ராசி பலன் (வெள்ளிக்கிழமை) – 21-08-2020

மேஷம்

இன்று நீங்கள் பிறரிடம் பேசும்போது கவனமாக பேச வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பணிச்சுமை அதிகமாக காணப்படும். குடும்பத்தாரிடம் தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். தேவையற்ற செலவுகள் உருவாகும். குளிர்ச்சியான உணவுகளை தவிர்ப்பது நல்லது.

ரிஷபம்

Advertisement

நீங்கள் எந்த ஒரு முயற்சியை எடுப்பதாக இருந்தாலும் ஒருமுறைக்கு இருமுறை நன்றாக யோசிக்க வேண்டும். உங்களுடைய பணிகளை திட்டமிட்டு செய்து முடிப்பதன் மூலம் நல்ல பலன்கள் ஏற்படும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். நிதிநிலைமை சிறப்பாக இருக்காது. தேவையற்ற செலவுகள் ஏற்படும். முதுகுவலி பிரச்சினை வரலாம்.

மிதுனம்

இன்று நீங்கள் மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். உங்கள் நண்பர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். உங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். பணவரவு காணப்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கடகம்

இன்று நீங்கள் பதட்டத்தோடு காணப்படுவீர்கள். மனதை அமைதியாக வைத்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும். பணிச்சுமை அதிகமாக காணப்படும். பண வரவு குறைவாக இருக்கும். இருமல் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

சிம்மம்

தேவையற்ற வாக்குவாதங்கள் உருவாகும். பணிச்சுமை அதிகமாக இருக்கும். உங்கள் பணிகளை திட்டமிட்டு செய்து முடிக்க வேண்டும். குடும்பத்தாரிடம் பொறுமை இழந்து காணப்படுவீர்கள். பணவரவு மற்றும் ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.

கன்னி

இன்று நீங்கள் பொறுமையோடு இருக்க வேண்டும். தியானம் மேற்கொள்வதன் மூலம் ஆறுதல் கிடைக்கும். உங்கள் பணிகளை சில தடைகளோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும் பணவரவு குறைவாக இருக்கும். தேவையற்ற குழப்பங்களால் மன உளைச்சல் உருவாகும்.

துலாம்

இன்று சிறப்பான நாளாக இருக்கும். உங்கள் முயற்சியில் நல்ல பலனை தரும். பணிகள் சிறப்பாக நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பண வரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.

விருச்சிகம்

இன்றைய தினம் மகிழ்ச்சியாக செல்லும். உங்கள் பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். உங்கள் பணிகளை திறமையாக செய்து கொடுப்பீர்கள். உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் அன்பை வெளிப்படுத்துவீர்கள். பண வரவு திருப்தியாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

தனுஷ்

இன்று நண்பர்களை சந்திப்பதை தவிர்க்கவும். பணிச்சுமை அதிகமாக காணப்படும். உங்கள் பணிகளை திட்டமிட்டு செய்து முடிக்க வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி குறைவாக இருக்கும். தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். தொண்டை வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

மகரம்

இன்று நீங்கள் சற்று மந்தமாக காணப்படுவீர்கள். உங்கள் பணிகளை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். குடும்பத்தாரிடம் பேசும் போது கவனமாக பேச வேண்டும். பணம் இழக்க வாய்ப்பு உள்ளது. அதை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கும்பம்

இன்றைய தினம் திருப்திகரமாக செல்லும். புதிய வாய்ப்புகள், புதிய தொடர்புகள் ஏற்படும். கடுமையான பணிகளை மிக எளிதாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் நல்லுறவு ஏற்படும். பண வரவு மற்றும் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மீனம்

உங்களுடைய புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி இன்றைய தினத்தை சிறப்பான நாளாக மாற்றுவீர்கள். உங்கள் பணிகளை திறமையாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினர்கள் உங்களை நன்றாக புரிந்து கொள்வார்கள். நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.