சிவப்பெருமானின் அம்சமான தட்சிணாமூர்த்திக்கு வியாழன் தோறும் கொண்டைக்கடலை நைவேத்யம் படைத்து வில்வம் இலைகளால் பூஜித்து வந்தால் ஜாதகத்தில் குரு பலம் இல்லாதவர்களுக்கு குரு பலம் ஏற்படும். உத்தியோகத்தில் சிக்கல்கள் நீங்கும். கல்வியில் மந்த நிலை விலகும்.
தட்சிணாமூர்த்தி மூலமந்திரம்:
ஓம் நமோ பகவதே தட்சிணாமூர்த்தயே
மஹ்யம் மேதாம் பிரக்ஞாம் ப்ரயச்ச நமஹ;
வியாழக்கிழமைகளிலும் பௌர்ணமி தினங்களிலும் சிவன் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு எதிரே அமர்ந்துகொண்டு இந்த மந்திரத்தைச் சொல்லி வணங்கலாம். தம்பதிகள் இந்த மந்திரத்தை சொல்லி வழிபட்டால் தம்பதி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.
தட்சிணாமூர்த்தி காயத்ரி மந்திரம்:
ஓம் தட்சிணாமூர்த்தியே வித்மஹே
த்யாநஸ்தாய தீமஹி
தந்நோ தீஸஹ் ப்ரசோதயாத் !
வீட்டு பூஜையறையில் அமர்ந்துகொண்டு தட்சிணாமூர்த்தி காயத்ரி மந்திரத்தையும் மூல மந்திரத்தையும் சொல்லி வணங்கி வந்தால் சுபிட்சமும் ஐஸ்வரியமும் கிடைக்கும். மாணவர்கள், கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.