தினசரி சிக்கன் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்

அசைவ உணவை விரும்பி சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள் அதிகமாக விரும்புவது சிக்கனை தான். அசைவ உணவுகள் உடலுக்கு நல்லது என்றாலும் அதனை சரியான அளவில் சாப்பிட வேண்டும்.

கோழி கறியை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் பற்றி பலருக்கும் தெரிவதில்லை. மலிவான விலை மற்றும் சுவை காரணமாக அதிகமான வீடுகளில் இந்த சிக்கன் இடம்பெறுகிறது.

சிக்கன் உடலுக்கு நல்லது என்றாலும் இதனை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது. அதை பற்றி விரிவாக இங்கு பார்க்கலாம்.

மற்ற இறைச்சிகளை ஒப்பிட்டு பார்க்கும்போது சிக்கனில் கொழுப்பு மிகவும் குறைவாக உள்ளது. புரதம் அதிகமாக உள்ளது. சிக்கனை உணவில் அதிக அளவு சேர்த்துக் கொண்டால் உடல் எடையில் பாதிப்பு, இருதயத்தில் பாதிப்பு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

கோழிக்கறியை உணவில் சேர்த்துக் கொள்வதால் நமது உணவில் 10 முதல் 35 சதவிகிதம் புரதம் கிடைக்கிறது. அந்தப் புரதம் அதிகமாக சேரும்போது உடலில் கொழுப்பு அதிகரிக்கும். இதனால் உங்கள் உடல் எடையும் அதிகரிக்கும். மேலும் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவையும் உயர்த்தும்.

கோழி மற்றும் புரதச் சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொண்டால் இருதய பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

பிராய்லர் கோழி வளர்ப்பில் நுண்ணுயிர் எதிர்ப்புகளை கால்நடைகளுக்கு செலுத்துவது வழக்கம். இதனால் நமது உடலில் இந்த நுண்ணுயிர் எதிர்ப்பிகள் எதிர் விளைவுகளை ஏற்படுத்தலாம்.

மருந்துகள் மூலம் வளர்க்கப்படும் பிராய்லர் கோழிகளை தொடர்ந்து நாம் சாப்பிட்டு வரும்போது பல்வேறு நோய் தொற்றுக்கு ஆளாகின்றோம்.இதனால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படும்.

கோழி கறி சாப்பிடுவது ஆபத்து என்று கூறவில்லை அதனை அதிகமாக சாப்பிடும்போது அதில் உள்ள சத்துக்கள் அதிகமாகி உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும்.

Recent Post

RELATED POST