தற்போதைய சூழ்நிலையில் நின்று கொண்டு சாப்பிடும் பழக்கம் அதிகரித்துவிட்டது. இப்பொது திருமணங்களிலும் பஃபே(buffet) விருந்து என்று நின்று கொண்டு சாப்பிடும் பழக்கம் அதிகரித்துவிட்டது.நடை பாதையில் உள்ள உணவகங்களில் நின்று கொண்டு சாப்பிடுபவர்களை நாம் தினம்தோறும் பார்த்து கொண்டுதான் இருக்கிறோம். இப்படி நின்று கொண்டு சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் தீமைகள் என்ன என்பதை இதில் பார்ப்போம்.
செரிமான கோளாறு
நின்று கொண்டே சாப்பிடுவதால் உணவுகள் செரிமான மண்டலத்திற்குள் செல்லும் வேகம் அதிகரிக்கிறது. இதனால் குடலின் அழுத்தம் அதிகமாகி செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும். மேலும் உணவு வேகமாக கீழே செல்வதால் உங்களுக்கு போதுமான அளவு சாப்பிட்டு விட்டீர்களா என்பது உங்களுக்கே தெரியாது. இதனால் மேலும் அளவுக்கு அதிகமாக சாப்பிட தோன்றும்.
தரையில் அமர்ந்து சாப்பிடும் பழக்கம் ஆதி காலத்திலிருந்தே உள்ளது. தரையில் அமர்ந்து சாப்பிடுபவர்களுக்கு செரிமானம் சீராக இருக்கும். உங்களுக்கு போதுமான அளவு உணவு கிடைத்துவிடும்.
எந்த திசையில் அமர்ந்து சாப்பிட வேண்டும்?
கிழக்கு திசையை நோக்கி அமர்ந்து சாப்பிட்டு வந்தால் கல்வி வளரும், ஆயுள் விருத்தியாகும்.
தெற்கு திசையை நோக்கி அமர்ந்து சாப்பிட்டு வந்தால் அழியாப் புகழ் உண்டாகும்.
மேற்கு திசையை நோக்கி அமர்ந்து சாப்பிட்டுவந்தால் செல்வம் பெருகும்.
வடக்கு திசையை நோக்கி அமர்ந்து சாப்பிட்டு வந்தால் நோய் வாய்ப்படும் நிலை உண்டாகும்.