புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு நேரடியாக பல உடல்நல பாதிப்புகள் ஏற்படும். இதில் மோசமான விஷயம் என்னவெனில் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களின் அருகே நிற்பதால் அவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
புகைப்பவர்களின் அருகில் இருக்கும் போது அவர்கள் வெளியிடும் புகையை சுவாசிப்பது உங்கள் ஆரோக்கியத்தையும் கடுமையாக பாதிக்கும். புகைப்பழக்கம் இருப்பவர்கள் பாதிக்கப்படுவதை போலவே பல உடல்நல அபாயங்களுக்கு புகைபிடிக்காதவர்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை பல ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன.
சிகரெட் பிடிப்பவரின் அருகில் நிற்பதால் கீழ் சுவாசக்குழாய் நோய் தொற்றுகள், நுரையீரல் புற்றுநோய், நுரையீரல் சார்ந்த நோய்கள், மூச்சுக்குழாய் அழற்சி, அடிக்கடி இருமல், தும்மல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட சுவாசப் பிரச்சனைகள் ஏற்படும்.
புகைப்பிடிப்போருக்கு இதய நோய், கரோனரி இதய நோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் மிக அதிகம். இவர்களை போலவே புகைபிடிக்காத ஆனால் புகையை சுவாசிப்போருக்கு இதய நோய் ஏற்படும் அபாயம் 25%-30% மற்றும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் 20%-30% அதிகம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
சிகரெட் பழக்கம் உள்ளவர்களின் அருகில் இருப்பதால் இளம் குழந்தைகளுக்கு சுவாச பாதை நோய்த்தொற்றுகள், ஆஸ்துமா உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. பெரியவர்களுக்கு இதய நோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் ஏற்படும்.
எனவே புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அந்த பழக்கத்தை நிறுத்த முயற்சி செய்யுங்கள். புகைபிடிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் அவர்களிடம் இருந்து விலகியே இருங்கள்.