உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் பேரிச்சம் பழத்தில் நிறைந்துள்ளது. தினமும் ஒரு பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். பேரிச்சம் பழத்தில் பொட்டாசியம், நார்ச்சத்து, மாங்கனீசு, வைட்டமின் பி6 ஆகிய சத்துக்கள் உள்ளது.
பேரிச்சம் பழத்தில் அதிக சத்துக்கள் நிறைந்திருப்பதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடலாம். இந்த பழங்கள் அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
கண் பார்வை
வைட்டமின் ஏ குறைவாக இருந்தால் கண்பார்வை மங்கலாகும். பேரிச்சம் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்தப் பிரச்சனைகள் வருவதைத் தடுக்கலாம். தேனில் ஊறவைத்த பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் வருவதை தடுக்கலாம்.
செரிமான பிரச்சனைகள்
பேரிச்சம் பழத்தில் நார்ச்சத்து நிறைந்து இருப்பதால் அதை தினமும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், குடல் புற்றுநோய் போன்ற பிரச்சனைகளை வராமல் தடுக்கும்.
ஞாபக சக்தி அதிகரிக்க
பேரிச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால் கை கால் தளர்ச்சி, நரம்பு தளர்ச்சி ஆகியவை குணமாகும். மேலும் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
ரத்தசோகை
தினமும் 3 பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உதவும். பேரிச்சம் பழத்தில் உள்ள இரும்புச்சத்து ரத்த அணுக்களின் அளவை அதிகரித்து இரத்த சோகை வராமல் தடுக்கும்.
நரம்பு மண்டலம்
பேரிச்சம்பழத்தில் சோடியம் குறைவாக இருக்கும். அதே நேரத்தில் பொட்டாசியம் அதிகமாக இருக்கும். இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
உறுதியான எலும்பு
பேரிச்சம் பழத்தில் உள்ள பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் இருப்பதால் அதனை தினமும் சாப்பிட்டு வந்தால் எலும்பு தேய்மானத்தை தடுத்து எலும்புகளுக்கு வலுவூட்டும்.