பதப்படுத்தப்பட்ட உணவுகளால் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானவை என்று உறுதியாக கூறலாம். பதப்படுத்தப்பட்ட உணவுகளால் ஆண்மை குறைவுக்கும் காரணமாக இருப்பதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதிக கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆண்களின் விந்து உற்பத்தியை பாதிக்கும் என கூறப்படுகிறது.
பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்பவர்களை விட காய்கறிகள், பழங்கள் நிறைந்த சைவ உணவு பழக்கம் உள்ளவர்களுக்கு விந்து அணுக்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ஆண்கள் விந்தணு உற்பத்தி பாதிக்காமல் இருக்க தவிர்க்க வேண்டிய உணவுகள் என்ன என்பதை இதில் பார்ப்போம்.
பதப்படுத்தப்பட்ட இறைச்சி:
பதப்படுத்தப்பட்ட இறைச்சி மேற்கத்திய நாடுகளில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் விந்தணு உற்பத்தி குறைவதாக ஹார்வேர்டு ஆய்வு தெரிவித்துள்ளது.
கார்பனேட்டட் பானங்கள்:
கார்பனேட்டட் பானங்கள் பானங்களை அதிக அளவு குடிப்பதினால், விந்து அணுக்களின் செயல் திறன் பாதிக்கப்படுவதாக ஆய்வு தெரிவிக்கிறது.
பாலாடைக் கட்டி
பாலாடைக் கட்டி மற்றும் அதிக கொழுப்புள்ள பால் பொருட்களளை அதிகமாக எடுத்துக்கொண்டால் ஆண்மை குறைவை ஏற்படுத்தும்.
சோயா உணவு வகைகள்
சோயா பொருட்களை அதிக அளவு எடுத்துக்கொள்ளும் 99 சதவிகிதம் பேருக்கு விந்து அணுக்களின் எண்ணிக்கையில் பாதிப்பு ஏற்படுவதாக பாஸ்டனில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.