இந்தியாவின் தலைநகரான டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்து வருகிறது. டெல்லி நகரம் முழுவதும் காற்று மாசு காரணமாக புகை மூடப்பட்டுள்ளது. காற்றின் தரம் மிகவும் ஆபத்தான நிலைக்கு சென்றுள்ளது.
காற்று மாசு காரணமாக இருமல், கண்களில் நீர் வடிதல், காய்ச்சல், மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் நுரையீரல் நோய்கள் உருவாகின்றன. இதற்கான காரணம் காற்றில் அதிகமாக உள்ள சல்பர் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு மற்றும் நைட்ரஜன் டை ஆக்சைடு போன்றவை ஆகும்.
இந்த காற்று மாசுபாட்டின் விளைவாக டெல்லி மக்களின் ஆயுட்காலம் 7.8 ஆண்டுகள் குறைகிறது என சிகாகோ பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெரும்பாலானவர்கள் புகைபிடிக்கவே இல்லை எனவும், காற்று மாசுபாட்டின் காரணமாகவே அதிக அளவில் புற்றுநோய் உருவாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.