தேவாதிராஜன் கோவில் வரலாறு

ஊர்: தேரழுந்தூர்

மாவட்டம்: நாகப்பட்டினம்

மாநிலம் : தமிழ்நாடு.

மூலவர் : தேவாதிராஜன்

உற்சவர்: ஆமருவியப்பன்

தாயார் : செங்கமலவல்லி

ஸ்தலவிருட்சம்: மகிழ மரம்

தீர்த்தம்: காவிரி, தர்சன புஷ்கரிணி

சிறப்பு திருவிழாக்கள்: வைகுண்ட ஏகாதசி, கோகுலாஷ்டமி, நவராத்திரி, வைகாசி திருவோணத்தில் பிரமோட்சவம்.

திறக்கும் நேரம்: காலை 7:30 மணி முதல் 12:00 மணி வரை, மாலை 5:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை.

தல வரலாறு

சிவனும் பெருமானும் சொக்கட்டான் விளையாடிய போது குழப்பம் ஏற்பட்டது. இதற்கு நடுவராக இருந்த பார்வதி பெருமாளுக்கு சாதகமாக இருந்ததால், சிவனுக்கு கோபம் வந்து பசுவாக மாறும் படி சாபமிட்டார். அவருக்குத் துணையாக லட்சுமியும், சரஸ்வதியும் பசுவாக மாறி பூலோகம் வந்தனர். இவர்களை மேய்ப்பவராக “ஆ’மருவியப்பன் என்ற பெயரால் பெருமாள் இத்தலம் சென்றடைந்தார்

பெருமாளின் 108 திவ்யதேசங்களில் இதுவும் ஒன்று இங்கு பெருமாளையும் தாயாரையும் ஒன்றாக சேர்த்து மங்களாசாசனம் செய்துள்ளார் திருமங்கையாழ்வார். கவிப்பேரரசர் கம்பன் இந்த ஊரில் பிறந்திருக்கிறார். சாளக்கிராமத்தினால் ஆன மூலவர் தேவராஜன் 13 அடி உயரத்தில் உள்ளார். மூலஸ்தானத்தில் பார்வதிதேவி பசு ரூபத்தில் காட்சி கொடுக்கிறார்.

Recent Post