அருள்மிகு தேவநாத பெருமாள் திருக்கோயில்

ஊர்: திருவந்திபுரம்

மாவட்டம்: கடலூர்

மாநிலம் : தமிழ்நாடு.

மூலவர் : தேவநாதர்

தாயார் : செங்கமலம்

ஸ்தலவிருட்சம்: மகிழ மரம்

தீர்த்தம்: கருடாதீர்த்தம்

சிறப்பு திருவிழாக்கள்: சித்திரை மதம்- தேவநாதப்பெருமாள் பிரமோற்சவம்-10 நாட்கள் திருவிழா 5 ம் நாள் இரவு கருடசேவை-9 ம் நாள் தேர் தீர்த்தவாரி விடையாற்றி- அன்று மட்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவார்கள். வைகாசி விசாகம், பெருமாள் வசந்த உற்சவம், அமாவாசை, ஆடிபூர உற்சவம், ஆவணி பவித்ரா உற்சவம், கிருஷ்ணா ஜெயந்தி உற்சவம், புரட்டாசி மகா தேசிகன் பிரம்மோற்சவம், ஐப்பசி தீபாவளி பண்டிகை முதலாழ்வார்கள் உற்சவம், திருக்கார்த்திகை உற்சவம், மார்கழி அனுமத் ஜெயந்தி.

திறக்கும் நேரம்: காலை 6:00 மணி முதல் 11:00 மணி வரை, மாலை 4:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை.

தல வரலாறு

அகம்பாவம் பிடித்த தேவர்கள் அசுரர்களால் தோற்கடிக்கப்பட்டு பல இன்னல்களுக்கு ஆளானார்கள். அவர்கள் பிரம்மனிடம் முறையிடவே, பரமனை துணை கொண்டு யுத்தம் செய்யக் கூறினார். சிவன் அசுரர்களுக்கு பக்கபலமாக நின்று தேவர்களை தாக்கினார். இதைக்கண்ட நாராயணன் சக்ராயுதத்தை ஏவி அசுரர்களை கொன்று குவித்தார்.

இறுதியில் அசுரர்கள் நாராயணரை சரணடைந்தனர். பகவான் அனைவரையும் அரவணைத்து, தமது திருமேனியில் பிரம்மனையும், சிவனையும் காட்டி மும்மூர்த்தியாக காட்சி கொடுத்தார். தேவர்களுக்கு தலைவனாக இருந்தமையால் “தேவநாதன’ என்ற திருநாமம் உண்டாயிற்று.

பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இது 42வது திவ்ய தேசம். திவ்யதேசங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது, இத்தளம் ஆதிசேஷனால் நிர்மாணிக்கப்பட்ட தலம். ஆதிசேஷனால் நிர்மாணிக்கப்பட்ட கிணறு இன்றும் கோயிலில் உள்ளது. பிரம்மா, சிவன், இந்திரன், பூமாதேவி ,பிருகு, மார்க்கண்டேயர் முதலானோர் தவம் செய்த தலம். ரிஷியினுடைய சாபத்தால் இன்றும் இந்த நதியின் தீர்த்தம் மழை காலத்தில் ரத்தம் போல செந்நிறமாக ஓடுகிறது.

இலங்கைக்கு சஞ்சீவி பர்வதத்தை எடுத்துச் சென்றபோது அனுமானின் கையிலிருந்து சஞ்சீவி மலையில் இருந்து சிறிதளவு சரிந்து இந்த மலையில் விழுந்ததனால் இது ஒளஷாதாசலம் என்ற பெயர் கொண்டது. அந்த மலையில் லட்சுமி ஹயக்ரீவர் எழுந்தருளியுள்ளார். உலகிலேயே இவ்வூரில் தான் முதன் முதல் ஹயக்ரீவருக்கு கோவில் ஏற்பட்டது.

Recent Post