கழன்று ஓடிய விரைவு ரயில் எஞ்சின்…நடுவழியில் நின்ற ரயில் பெட்டிகள்

அசாம் மாநிலத்தின் திப்ருகாரில் இருந்து தமிழகத்தின் தென் எல்லையான கன்னியாகுமரி வரை விவேக் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. 

இந்த ரயிலானது மேகாலயா, பிகார், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் வழியாக பயணிக்கிறது. 

இந்நிலையில் இன்று காலை 5 மணியளவில் வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென எஞ்சின் கழன்று ஓடியது. இதனால் ரயில் பெட்டிகள் நடுவழியில் நின்றன.

இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரயில்வே அதிகாரிகள் விரைந்து வந்து புதிய கப்லிங் போட்டு சரி செய்தனர். காட்பாடி அருகே நடந்த சம்பவத்தால் அந்த வழித்தடத்தில் செல்ல வேண்டிய ரயில்கள் பாதிக்கப்பட்டன.

Recent Post

RELATED POST