அயன், கவண் படத்தின் இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார்!

திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்தார்.

kv anand passed away

இயக்குனர் ஷங்கருடன் இணைந்து முதல்வன், பாய்ஸ், சிவாஜி: தி பாஸ் ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். மேலும் காதல் தேசம், நேருக்கு நேர், செல்லமே ஆகிய படங்களிலும் உதவி இயக்குனராக பணிபுரிந்தார்.

இயக்குனர் கே.வி.ஆனந்த்த அயன், கோ, மாற்றான், கவன் உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார்.

54 வயதான கே.வி.ஆனந்த் ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குநரானவர். இயக்குனர் கே.வி.ஆனந்த் மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை 3 மணிக்கு உயிரிழந்ததாக செய்தி தொடர்பாளர் ரியாஸ் கே அகமது தகவல் தெரிவித்துள்ளார்.