காலையில் எழுந்த உடனே டீ, காபி குடிக்கும் பழக்கம் பலருக்கும் உள்ளது. டீ, காபி குடிக்கும் போது பிஸ்கட் சாப்பிடுவது வழக்கம். இவ்வாறு தினமும் காலையில் வெறும் வயிற்றில் பிஸ்கட் சாப்பிடுவதால் ஏற்படும் உடல் நலக்கோளாறுகள் என்ன என்பதை பாப்போம்.
காலையில் வெறும் வயிற்றில் பிஸ்கட் சாப்பிடுவது செரிமான பிரச்சினையை உண்டாக்கும். உப்பு சேர்க்கப்பட்ட பிஸ்கட்டுகள் இரத்த அழுத்த அளவை உயர்த்தும்.
வெண்ணெய் சேர்க்கப்பட்ட பட்டர் பிஸ்கட்டுகள் உங்கள் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கலாம். செயற்கை சுவையூட்டிகள் நிறைந்த பிஸ்கட்டுகளை சாப்பிடுவதால் உடலில் கலோரிகள் அதிகமாகி உடல் எடை வேகமாக அதிகரிக்கும்.
பிஸ்கட்டுகளில் பயன்படுத்தப்படும் சுத்திகரிக்கப்பட்ட மாவின் உயர் கிளைசெமிக் உங்கள் இரத்த குளுக்கோஸ் அளவை உயர்த்தக்கூடும்.
எனவே காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்துவிட்டு பிறகு 15 நிமிடங்கள் கழித்து மற்ற உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.