நாம் அன்றாட வாழ்வில் தேவையான சில விஷயங்களை Google இணையத்தளத்தில் தேடி தெரிந்துக் கொள்வோம். ஆனால் கூகுளில் தேட கூடாதவை என சில உண்டு. அதனை இப்போது பார்ப்போம். குறிப்பாக இந்த 12 விஷயங்களைக் கூகுளிடம் கேட்கவே கூடாது.
அதற்கு முன், கூகுளை பற்றி சில வார்த்தைகள் பார்க்கலாம், நாம் தேடும் அனைத்து விஷயங்களையும் வேரு யாரோ வெளியிட்ட தகவலை எடுத்து கொடுக்கும் தகவலே தவிர, அந்த தகவல் கூகுள் நிறுவனம் வெளியிட்டது அல்ல என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அந்த தகவல் உண்மையானதா என்பது கூகுளுக்கு தெரியாது.
என்னென்ன தேடக்கூடாது என்பதை வரிசையாக பார்க்கலாம்
- ஆபாச தளங்களை தேட வேண்டாம். காரணம், அந்த தேடல் உங்களது மின்னஞ்சலில் சேமிக்கப்பட்டு, அது தொடர்பான விளம்பரங்களை உங்களிடம் காட்டும். மேலும், ஆபாச தளத்தில் வரும் சில விளம்பரங்கள் மூலம் சில டிஜிட்டல் திருடர்கள் தங்களது முக்கியமான தகவல்களை திருட வாய்ப்புகள் உண்டு ஆகயால் சற்று உஷாராக இருங்கள்.
- ஆன்லைன் வங்கி குறித்துத் தேடும் போது, சில நேரங்களில் போலியான வங்கி இணையம் சில நேரங்களில் முதலில வந்து நிற்கும். நாம் சில நேரங்களில் கவணிக்காமல் நமது வங்கி தகவல்களை கொடுத்துவிடுவோம். ஆகையால் சற்று கவனித்து செயல்பட வேண்டும்.,.
- நம்மில் பலர், சில முக்கிய நிறுவனங்களின் கஸ்டமர் கேர் எண்களை தேடுவோம். ஆனால், கூகுள் நிறுவனத்தின் தேடுதல் பொறியை ஏமாற்றி மோசடி செய்பவர்களின் எண் முதலில் வருமாறு வைத்து இருப்பார்கள். அவர்கள் விரிக்கும் வலைக்குள் வீணாய் சிக்கிக் கொள்ளாதீர்கள்.
- உங்களது மொபைலில் APPS ஏதும் தேவைப்பட்டால், கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோர் போன்ற அதிகாரப்பூர்வ தளங்களிலிருந்து ஆப்-களை டவுன்லோட் செய்யுங்கள். நேரடியாக கூகுளில் தேடி சில ஆப்களை எடுத்தால் மோசடி நபர்களின் ஆப்களில் சிக்க வாய்ப்புண்டு. தெளிவாக இருங்கள்.
- உடல் ஆரோக்கியம் சம்பந்தமான மருந்து பொருட்களை இணையத்தில் இருக்கும் தகவல்களை நம்பி வாங்க வேண்டாம். சில நேரங்களில் தவறாக செல்ல வாய்ப்புண்டு. மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் வாங்கவே வேண்டாம்.
- அரசாங்கங்கத்தின் அதிகார்பூர்வ வலைத்தளங்கள் என்ற பெயரில் மோசடி நபர்கள் இணையதளம் நடத்தி உங்களது பணத்தினை திருடுவதற்கு காத்துக்கிடப்பார்கள். அரசாங்க தளமே மோசடி செய்பவர்களின் பிரதான இலக்குகளாகும். எனவே சரியான URL உங்களுக்குத் தெரிந்தால் நேரடியாக அந்த தளங்களுக்குச் செல்லுங்கள். போலியான மோசக்காரர்களின் வலைத்தளங்களில் சிக்கிக்கொள்ளாதீர்கள்.
- கூகுள் மின்னஞ்சலை பயன்படுத்தி சில தளங்களில் கணக்கு தொடங்க பரிந்துரை செய்கிறார்கள், அந்த சேவை உங்கள் நேரத்தை சேமிக்கும். ஆனால், எந்த தளத்தில் இதனை பயன்படுத்துகிறிர்கள் என்பதையும் அது நன்கு அறிந்த தளமா என்று தெரிந்து கொண்டு பயன்படுத்தி கொள்ளுங்கள். சில நேரங்களில் மோசடி நபர்களின் தளத்தில் நுழைய வாய்ப்புண்டு.
- உங்கள் பணத்தை முதலீடு செய்ய நன்கு அறிந்த வல்லுனநர்களிடம் ஆலோசனை பெற்று முதலீடு செய்யுங்கள். கூகுளில் தேடினால், ஒரே நாளில் கோடிகளில் சம்பாதிக்கலாம் போன்ற விளம்பரங்கள் வரும். அதனை நம்பி ஏமாற வேண்டாம். கூகுள் உங்களுக்கு எடுத்து கொடுக்கமே தவிர, பரிந்துரை செய்யாது.
- ஈ-காமர்ஸ் சம்பந்தமான அதாவது ஆன்லைன் பொருட்கள் விற்க்கும் வலைதளங்களை இணையத்தில் தேடினால், லட்சகணக்கான தளங்கள் வரும். சிலர் நியமாக இருப்பார்கள். சில போலி வணிக தளங்கள், போலியான தள்ளுபடி விளம்பரங்களை வைத்து விற்பனை என்ற பெயரில் உங்களது பணத்தை திருட வாய்ப்புண்டு.
- கூகிள் மூலம் இலவச ஆன்டி-வைரஸ் டவுன்லோட் செய்ய வேண்டாம். சில நேரங்களில் இலவசம் என்ற பெயரில் உங்களது தகவல்களை திருடப்பட வாய்ப்புண்டு.
- கூகிளில் இலவச கூப்பன் கோடு (Coupon Code) விபரங்கள் கிடைக்கும், அந்த கூப்பன் கோடுகள் நம்பிக்கைக்குரிய தளமாக இருந்தால் பயன்படுத்தவும். அறிமுகமில்லா தளமாக இருந்தால் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது.