சாப்பிட்ட உடனே இனிப்பு சாப்பிடுறீங்களா? உங்களுக்கு தான் இந்த பதிவு

சாப்பிட்ட பிறகு எதாவது இனிப்பு சாப்பிடணும்னு பலரும் விருப்பப்படுவாங்க. இது எந்த அளவுக்கு சரியானது? அப்படி இனிப்பு சாப்பிடணும்னு நினச்சா என்ன சாப்பிடணும்? எப்படி சாப்பிடணும்? இந்த கேள்விகளுக்கான பதிலா இந்த காணொளி உங்களுக்கு கண்டிப்பா அமையும். வீடியோவை தொடர்ந்து பாருங்க. விருந்துகள்ல பொதுவா இனிப்பை தான் இலையில முதல்ல வைப்பாங்க. இனிப்பை முதல்ல சாப்பிடுறது பசி உணர்வை தூண்டும்.

அதே நேரத்துல அதிகமான உணவு சாப்பிடறதையும் குறைக்க உதவும். அதுனால உடல் எடை குறைக்கும் முயற்சில இருக்குறவங்க, கலோரிகள் குறைவா எடுத்துக்கணும்னு கவனமா இருக்குறவங்க இனிப்பை முதல்ல சாப்பிடுறது ரொம்பவே சரியான அணுகுமுறையாகவும் இருக்கும். அதே நேரம் சாப்பிட்ட பிறகு இனிப்பு சாப்பிடும்போது அதிகப்படியான காரத்தை மட்டுப்படுத்தி உணவுக்குழாய்க்கு இதமளிக்குறதோட, செரிமானத்தை வேகப்படுத்தவும் உதவும்.

சிலர் கலோரிகள் அதிகமா இல்லாத இனிப்பு சாப்பிடணும்னு சாப்பிட்ட பிறகு கொஞ்சம் வெல்லம் எடுத்துக்குறத பழக்கமா வச்சு இருக்காங்க. வெல்லத்தை விடவும் வேர்க்கடலை உருண்டை, பொட்டுக்கடலை உருண்டை, எள்ளுருண்டை மாதிரியானதுல கொஞ்சமா எடுத்துக்கலாம்னு உணவியல் நிபுணர்கள் பரிந்துரைக்குறாங்க.

அதே நேரம் பழங்கள் சாப்பிடுறதா இருந்தா சாப்பிடுறதுக்கு அரை மணி நேரத்துக்கு முன்னாடி தான் சாப்பிடணும். இதுவே, சாப்பிட்ட பிறகு பழங்களை சாப்பிட்டா, பழம் தான் முதல்ல செரிமானம் ஆகும். சாப்பிட்ட உணவு அதுக்கப்பறம் செரிமானம் ஆகும். இதுனால வயித்துல தேவை இல்லாத அசௌகரியம் உண்டாகும். எனவே, சாப்பாட்டுக்கு முன்னாடி பழங்களையும் சாப்பாட்டுக்கு பிறகு மிதமான அளவுல இனிப்புகளையும் எடுத்து கொள்றது நல்லது. சக்கரை நோய் உள்ளிட்ட பிரச்சினை இருக்குறவங்க எப்போதுமே இனிப்பு சாப்பிடுறதை தவிர்த்துடுறது சிறப்பு.

Recent Post

RELATED POST