மழைக்காலத்தில் தக்காளியை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

நமது அன்றாட சமையலில் சில முக்கியமான காய்கறிகள் இருக்கும். அவை இல்லாமல் நமது சமையலானது முழுமை பெறாது. அப்படியான காய்கறிகளில் தக்காளியும் ஒன்றாகும். தக்காளியை தினமும் சாப்பிடுவதால் பல உடல்நல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

தக்காளியில் புரோட்டீன், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் கே, போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. தக்காளி சாற்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கொலஸ்ட்ரால் பிரச்சனைகளை சரியாகும். குறிப்பாக மழைக்காலத்தில் தக்காளி சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

தக்காளியில் லைகோபீன் நிறைந்துள்ளது. இந்த லைகோபீன் இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது. கொலஸ்ட்ரால் நோயாளிகளுக்கு தக்காளி சிறந்த மருந்தாக உள்ளது. தக்காளி சாற்றை தினமும் குடிப்பது கெட்ட கொழுப்பைக் கட்டுப்படுத்தும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தக்காளி விதைகளில் ஆக்சலேட்டுகள் இருப்பதால் சிறுநீரகக் கற்கள் அல்லது பித்தப்பைக் கற்கள் உள்ளவர்கள் தக்காளியைத் தவிர்க்க வேண்டும்.

தக்காளியில் உள்ள வைட்டமின் சி உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மழைக்காலத்தில் தக்காளியை சாப்பிடுவதால் நோய்த்தொற்றுகள் குறையும்.

Recent Post

RELATED POST