உணவில் தக்காளியை அதிகம் சேர்த்துக்கொண்டால் சிறுநீரக கற்கள் உருவாகும் என்ற எண்ணம் பலருக்கும் உள்ளது. இது உண்மைதானா அல்லது தவறான தகவலா என்பதை பற்றி பார்ப்போம்.
இந்திய உணவுகளில் தக்காளி இன்றியமையாத ஒன்று. நாம் சாப்பிடும் உணவுகள் முதல் கெட்ச்அப் வரை இதன் பயன்பாடு இன்றியமையாதது. தக்காளி உணவிற்கு கூடுதல் சுவையை தருகிறது.
தக்காளியில் வைட்டமின் ஏ, பொட்டாசியம், நார்ச்சத்து, புரதம், ஊட்டச்சத்துகள் ஆகியவை உள்ளது. தக்காளி கண்பார்வைக்கு மிகவும் நல்லது. புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தை குறைக்கிறது.
நமது சிறுநீரகங்களில் கால்சியம் ஆக்ஸலேட் அதிகளவு படிவதால் தான் சிறுநீரக கற்கள் உருவாகிறது. பல காய்கறிகளிலும் பழங்களிலும் இந்த கால்சியம் ஆக்ஸலேட் காணப்படுகிறது.
ரத்தத்தில் கால்சியத்தின் அளவு அதிகமாக இருந்தால் அதனை சிறுநீர் மூலம் வெளியேற்ற வேண்டிய சூழல் உருவாகிறது. ஆனால் சிறுநீரகத்தால் அவ்வளவு கால்சியத்தை வெளியேற்ற முடியாது. இந்த கால்சியம் படிப்படியாக குறைந்து கற்களாக மாறிவிடுகிறது. இதனால் தான் தக்காளியில் ஆக்ஸலேட் இருப்பதால் அதனை சிறுநீரக கற்களோடு ஒப்பிடுகின்றனர்.
தக்காளியில் ஆக்ஸலேட் அளவு மிகவும் குறைவு. 100 கிராம் தக்காளியில் 5 கிராம் அளவு ஆக்ஸலேட் மட்டுமே இருக்கிறது. தக்காளி சாப்பிட்டால் சிறுநீரக கற்கள் உருவாகும் என்பதை நீங்கள் நம்ப வேண்டாம்.