உன்னுடைய முடி பூனை முடியைப் போல இருக்கிறது. அடர்த்தியாக வளர வேண்டுமென்றால் சவரம் செய் என்று சொல்வதை கேட்டிருப்போம். பொதுவாக, சவரம் செய்தால் முடி வேகமாகவும் அடர்த்தியாகவும் வளரும் எனக் கூறப்படுகிறது. ஆனால், இது உண்மையல்ல.
சவரம் செய்தாலும், செய்யாவிட்டாலும் முடி ஒரே வேகத்தில் மற்றும் அடர்த்தியுடன் தான் வளரும். அதற்கு காரணம், நமது முடி பொதுவாக சூரிய ஒளி மற்றும் வெப்பத்தால் மெதுவாக வெளுத்துப் போகிறது. சவரம் செய்த பிறகு வெளிவரும் புதிய முடி, வெளுத்துப் போகாமல் அடர்த்தியான நிறத்தில் இருக்கும்.
புதிய முடி அடர்த்தியான நிறத்தில் இருப்பதால், அது வேகமாக வளர்வதைப் போல தோற்றம் தரலாம், ஆனால் அது உண்மையான அடர்த்தி அல்ல.