தயிரில் கால்சியம், புரதம், வைட்டமின்கள் B2 மற்றும் B12 மற்றும் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய சத்துக்கள் உள்ளன.
தயிர் இயற்கையாகவே கலோரிகளில் குறைவாக உள்ளது. இது உடல் எடையை குறைக்க சிறந்த உணவாக அமைகிறது. தயிரில் உள்ள புரதம் உங்களை நீண்ட நேரம் பசி எடுக்காமல் வைத்திருக்கும். இதனால் தேவையற்ற உணவுகளை உங்களால் தவிர்க்க முடியும்.
தயிரில் குறைந்த கிளைசெமிக் குறியீடுகள் உள்ளது. இவை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
தயிரில் நிறைந்துள்ள புரோபயாடிக்குகள் குடல் பாக்டீரியாவின் ஆரோக்கியமான சமநிலையை ஊக்குவிக்கிறது. இதன் மூலம் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
தயிரில் கொழுப்பு மற்றும் சர்க்கரை குறைவாக உள்ளது. இது உடல் எடை இழக்க விரும்புவோருக்கு ஆரோக்கியமான விருப்பமாக அமைகிறது.
உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க தினமும் ஒரு கப் தயிர் எடுத்து கொள்ளுங்கள்.