டிராகன் பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள்

டிராகன் பழம், இது நாம் அதிகமாக சுவைத்து அறியாத பழ வகைகளில் ஒன்றாகும். இது பார்ப்பதற்கு இளஞ்சிவப்பு நிறத்தில் அழகாக இருக்கும். தற்போது சந்தைகளில் இது கிடைக்கின்றது. தெற்கு ஆசிய நாட்டு மக்களின் உணவுப்பொருட்களில் இது முக்கிய இடத்தை பெற்று வருகின்றது.

டிராகன் பழம் பல நன்மைகளை கொண்ட பழமாகும். இது இனிப்பு மற்றும் புளிப்பு சுவையை கொண்டிருக்கும். இந்த டிராகன் பழம் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. மேலும் இது உடலிற்கு குளிர்ச்சியை தரக்கூடியதாகும். இது உடலில் நடைபெறும் அனைத்து செயல்களுக்கும் ஒரு முன்னேற்றத்தை கொடுக்க கூடிய பழம் என்றே கூறலாம்.

டிராகன் பழத்தில் உள்ள விதைகள் செரிமானத்திற்கு உதவுகிறது. மேலும் ஒயின் மற்றும் பல பானங்கள் தயாரிக்க இந்த பழத்தை உபயோகிக்கின்றன. மேலும் இதன் இலைகளை கொண்டு நல்ல ஆரோக்கியமான 12 தயாரிக்கலாம். இதன் தோலில் ஊட்டச்சத்து மிகவும் குறைந்து காணப்படுகின்றது. பொதுவாக இதனை யாரும் அதிகளவில் பயன்படுத்துவதில்லை.

Advertisement

இந்த டிராகன் பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் என்பதை பற்றி பார்ப்போம் டிராகன் பழத்தில் மூன்று வகைகள் உள்ளன.

மருத்துவ பயன்கள்

டிராகன் பழம், இதயத்தில் உள்ள இரத்த நாளங்கள் நன்றாக செயல்பட உதவுகிறது இதில் உள்ள விட்டமின் பி3 உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்கி, உடலை சீராக வைக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள கால்சியம் பாஸ்பரஸ் ஆகியவை எலும்புகளை வலிமையாகவும், பற்களை ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது.

டிராகன் பழம் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு சிறந்த ஆற்றலை அளித்து, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. செல்களின் வளர்சிதை மாற்றத்தால் உருவாகும் ப்ரீ ராடிக்கல் என்னும் அடிப்படை கூறுகளை அழிக்க இந்த பழத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மை உதவுகிறது. இதனால் இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்றவை தடுக்கப்படுகிறது.

டிராகன் பழத்தில் இருக்கும் கரோட்டின் புற்றுநோய்க்கு எதிரான குணங்களை வெளிப்படுத்துகிறது. மேலும் இது உடலில் உள்ள நச்சுக்கிருமிகளையும் அழிக்கின்றது.

டிராகன் பழத்தில் வைட்டமின் சி அதிகளவு உள்ளதால், இது சருமத்திற்கு மிகவும் நல்லது சருமத்தை நல்ல நிறத்துடன் வைக்க உதவுகின்றது இதில் உள்ள வைட்டமின் பி1, பி2, பி3 ஆகியவை இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, சரும ஆரோக்கியத்தையும் பாதுகாக்கின்றது.

டிராகன் பழத்தில் நார்ச்சத்து அதிகளவில் காணப்படுகின்றது. இதனால் குடல் இயக்கங்கள் சீராக்கப்பட்டு, உணவுகள் நன்கு செரிமானம் அடைவதற்கும் உதவுகிறது. இதனால் மலச்சிக்கல் ஏற்படாமல் பாதுகாக்கலாம். மேலும் குடல் எரிச்சல் அல்லது குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் தடுக்கப்படுகிறது.

டிராகன் பழம் கட்டிகளின் அளவை குறைக்க உதவுகிறது. நாம் சோர்வாக இருக்கும்போது, உடலில் கோளாறுகள் ஏற்படும்போது, பருவநிலை மாற்றத்தால் உடலில் மாற்றங்கள் ஏற்படும்போது, டிராகன் பழத்தை சாப்பிட்டு வந்தால் நல்ல பலனை காணலாம்.

மேலும் அனைத்து பழங்களின் மருத்துவ குணங்கள் பற்றி இங்கு காணலாம்.