இரவில் திராட்சை ஜூஸ் குடிப்பதால் தூக்கம் வருமா?

இரவில் ஆழ்ந்த தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். போதுமான நேரம் தூக்கம் இல்லையென்றால் அது ஆரோக்கியத்தை கெடுக்கும். உடல் பருமன் பிரச்சினைக்கும் வழி வகுத்துவிடும்.

இரவில் கிரீன் டீயை பருகுவது உடலுக்கு நல்லது. இதனால் உடலுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக நல்ல தூக்கத்திற்கு வழிவகை செய்யும். உடல் எடையை குறைக்க உதவும். இதய மன அழுத்தம், கவலையை போக்கும்.

தூங்குவதற்கு முன்பு பால் குடிக்கும் பழக்கம் குழந்தை பருவத்திலிருந்தே நிறைய பேர் பின்பற்றுகிறார்கள். அது உடலுக்கு ஆரோக்கியம் தரும். பாலில் கால்சியம் மற்றும் டிரிப்டோபன் கலந்திருக்கிறது. அது நன்றாக தூங்குவதற்கு உதவி புரியும். ஆனால் பருகுவது தரமான பாலாக இருக்க வேண்டும்.

இரவில் தூங்க செல்வதற்கு முன் சர்க்கரை சேர்க்காத திராட்சை ஜூஸ் சிறிதளவு பருகலாம். அது நன்றாக தூங்க உதவி செய்யும். திராட்சை ஜூஸ் தொடர்ந்து பருகி வந்தால் எடை இழப்புக்கும் வழிவகுக்கும்.

Recent Post