முருங்கையில் இருந்து கிடைக்கும் முருங்கை பிசினில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளது. முருங்கை பிசினில் இரும்புச் சத்து, கால்சியம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பொட்டாசியம், புரதம் போன்ற ஏராளமான சத்துக்கள் உள்ளன.
உடலில் உள்ள சிறுநீர் நன்றாக வெளியேறவும் காய்ச்சல், ஆஸ்துமா போன்ற நோய்கள் குணமாகவும் இது பயன்படுகிறது.
முருங்கை பிசினில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை தூண்டும். முருங்கை பிசினை பொடி செய்து அதனை சாப்பிட்ட பின் ஒரு ஸ்பூன் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம். இதன் மூலம் செரிமானம் மேம்படுத்தப்படும்.
முருங்கை பிசினில் பொடியை பாலில் கலந்து அதனுடன் கற்கண்டு சேர்த்து அருந்தினால் ஆண்மை அதிகரிக்கும். விந்தணுக்களையும் அதிகரிக்கும்.
ஒரு ஸ்பூன் முருங்கை பிசின் பொடியை வெந்நீரில் கலந்து அருந்துவதன் மூலம் வாயு, தலைவலியில் இருந்து விடுதலை பெறலாம்.
முருங்கை பிசின் சேர்க்கப்பட்ட டானிக்குகளை அல்லது லேகியங்களை சாப்பிட்டு வந்தால் தலைமுடி சீக்கிரம் நரைத்துப் போவது குறையும்.
முருங்கை பிசினில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. இதனை எடுத்துக் கொள்வதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்பெறும்.
பற்கள் ஆடுவது, ஈரில் ரத்தம் வடிதல் போன்ற பிரச்சனைகளை சரி செய்ய முருங்கை பிசின் பயன்படும்.