உலர்ந்த பழங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் மகத்துவங்கள்

பழங்கள் என்றாலே சத்து நிறைந்தவையாக தான் இருக்கும். அதிலும் உலர் பழங்களில் சத்து கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். அனைத்து பழங்களையும் இதுப்போன்று உலர வைத்து சிறிது நாட்கள் கழித்து சாப்பிட இயலாது.

குறிப்பிட்ட சில பழங்களை மட்டுமே இது போன்று சாப்பிட இயலும். அதில் நெல்லி, அத்தி, திராட்சை, பேரீச்சை போன்றவை மிக முக்கியமானவையாகும். பழங்களை உலர வைத்து உண்ணும் பழக்கம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே உணவுப்பழக்கத்தில் இருந்து வருகிறது. உலர் பழங்கள் நம் உடலுக்கு தேவையான வைட்டமின்கள், உடலுக்கேற்ற கனிமங்கள், நார்சத்து ஆகியவற்றை வழங்குகின்றன.

உலர்ந்த திராட்சை

உலர் திராட்சைகள் நார்ச்சத்து நிறைந்தவை. ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்தவை. கலோரி நிறைந்த இவற்றை உணவுக்குமுன் சாப்பிடும்போது, வயிறு நிறைந்த உணர்வைத் தருகிறது. அதனால் கலோரி நுகர்வு குறைகிறது. விளையாட்டு வீரர்கள் போட்டிகளின்போது தங்கள் செயல்திறனை அதிகரிக்கத் திராட்சையை உண்ணலாம்.

உலர்ந்த பிளம்ஸ்

நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்பு ஆகியவை நிறைந்தது. மெனோபாஸ் அடைந்த பெண்களுக்கு எலும்பு பலவீனத்தைத் தடுக்கக்கூடியது.

உலர்ந்த பேரீச்சை

இந்தியப் பெண்களிடையே ரத்தச்சோகை அதிகமாகக் காணப்படுகிறது. உலர்ந்த பேரீச்சை இரும்பைப்போன்ற சக்திவாய்ந்தது. இது ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது.

உலர்ந்த பழங்களில் ஊட்டசத்து அதிகம் இருந்தாலும் கலோரிகளின் அளவும் அதிகமாக இருப்பதால் இதனை அளவுடன் சாப்பிட வேண்டும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது உலர்ந்த பழங்களுக்கு ஒரு சிறந்த எடுத்துகாட்டாக இருக்கும்.

Recent Post

RELATED POST