EASYஆ அழகாகலாம்!!தண்ணீர் குடிங்க போதும்…எப்படி எந்த நேரத்தில்  குடிக்கலாம்?

பொதுவாக தற்பொழுதுள்ள இளைஞர்கள்,முக்கியமாக பெண்கள் தங்களின் முக அழகை பராமரிக்க வேண்டும் என நினைத்து செயற்கையான ரசாயனங்களால் செய்யப்பட்ட கிரீம்களை பயன்படுத்துகிறார்கள் சில நேரங்களில் அது பாதகமாக முடிந்து விட அதிகமான வாய்ப்பிருகிறது இயற்க்கை முறையில் என்னென்ன செய்தால் அழகாகவும் ,ஆரோக்கியத்துடனும் இருக்கலாம் என்பதை பற்றி இத்தொகுப்பில் பார்க்கலாம்.

ஒரு நாளிற்கு குறைந்தது 8 கிளாஸ் தண்ணீர் குடிப்பதால் சருமம் வறட்சியின்றி போதுமான நீரேற்றத்தைப் பெறுகிறது. இதனால் முகப்பருக்கள் உண்டாவதையும் தடுக்கலாம். முகப்பருக்கள் இருந்தாலும் அகற்றலாம்.

அதோடு சுருக்கங்கள் விழாமல் இளமையான சரும அழகைப் பெறலாம் என கூறப்படுகிறது. இதனால் இளமையிலேயே முதிர்ந்த தோற்றம் ஏற்படுவதையும் தவிர்க்கலாம். தொடர்ந்து தண்ணீர் அருந்துவதைப் பின்பற்றினால் பளபளப்பான பொலிவான முக அழகு கிடைக்கும் என மருத்துவரால் கருத்துதெரிவிக்கப்படுகிறது.

இவைத் தவிர தண்ணீர் நச்சு நீக்கியாகவும் செயல்படும் என்பதால் உடலை சுத்திகரிக்க நீரைத் தவிர சிறந்த குறிப்பு இருக்க முடியாது. அதேசமயம் அழகைப் பராமரிக்க நேரமில்லை. பணத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் கொண்டோருக்கும் சிறந்த வழி தண்ணீர் குடிப்பதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Post

RELATED POST