முந்திரி பருப்பில் மெக்னீசியம், பொட்டாசியம், தாமிரம், துத்தநாகம், இரும்பு, மாங்கனீசு போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளிப்பதில் முந்திரி முக்கிய பங்கு வகிக்கிறது.
முந்திரியில் பல நன்மைகள் இருந்தாலும் ஒரு சிலர் இதனை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
வாயுப் பிரச்சனை
ஏற்கெனவே வாயுப் பிரச்சனை உள்ளவர்கள் நார்ச்சத்தின் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியிருப்பார்கள். முந்திரியில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் அதை வெறும் வயிற்றில் சாப்பிடும்போது நார்ச்சத்து அளவை அதிகரித்துவிடும்.
உயர் இரத்த அழுத்தம்
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் சோடியத்தின் அளவை எப்போதும் சீராக வைத்திருக்க வேண்டும். முந்திரியில் சோடியம் அதிகளவு இருப்பதால் அதனை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. அவ்வாறு சாப்பிடுவதால் சோடியத்தை அளவை அதிகரித்துவிடும்.
சிறுநீரகப் பிரச்சனை
சிறுநீரகப் பிரச்சனை உள்ளவர்கள் பொட்டாசியம் அளவை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். முந்திரியில் பொட்டாசியம் நிறைவாக உள்ளதால் சிறுநீரகப் பிரச்சனை உள்ளவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது.