முட்டையில் புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள், பொட்டாசியம், சோடியம், கார்போஹைட்ரேட் போன்றவை உள்ளன. மக்களின் விருப்பமான காலை உணவாக முட்டை உள்ளது.
முட்டையில் பல ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும் வெள்ளை கருவை மட்டும் சாப்பிடலாமா? மஞ்சள் கருவை சாப்பிடலாமா? அல்லது இரண்டையும் சேர்த்து சாப்பிடலாமா என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. இதற்கான பதிலை இந்த பதிவில் பார்ப்போம்.
முட்டையின் வெள்ளைக்கரு:
முட்டையின் வெள்ளைக்கரு மஞ்சள் கருவைச் சுற்றியுள்ள திரவமாகும். இது பெரும்பாலும் நீர் (சுமார் 90%) மற்றும் புரதம் (சுமார் 10%) ஆகியவற்றால் ஆனது. முட்டையின் வெள்ளைக்கரு, அல்புமின் (albumin) என்றும் அழைக்கப்படுகிறது.
Also Read : நீங்கள் வாங்கும் முட்டை ஆரோக்கியமானதா? எப்படி கண்டுபிடிப்பது?
ஒரு முட்டையின் வெள்ளைக்கருவில் சுமார் 11 கிராம் புரதம் உள்ளது. தசை வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து அமினோ அமிலங்களும் இதில் உள்ளன. ஒரு முட்டையின் வெள்ளைக்கருவில் 17 கலோரிகள் மட்டுமே உள்ளது.
முட்டையின் வெள்ளைக்கருவில் கலோரிகள் குறைவாகவும், புரதச்சத்து அதிகமாகவும் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிடலாம்.
முட்டையின் மஞ்சள் கரு
மஞ்சள் கருவில் கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதால் உடல் நலப்பிரச்சனைகள் உள்ளவர்கள் அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
Also Read : உங்களுக்கு முட்டை பிடிக்குமா?..அதிகமா சாப்பிட்டா இந்த பிரச்சனையெல்லாம் வரும்..!!
ஒரு முட்டையின் மஞ்சள் கருவில் சுமார் 55 கலோரிகள் உள்ளன. முட்டையின் மஞ்சள் கருவில் மொத்தம் 27 கிராம் கொழுப்பு உள்ளதால் இவற்றை அளவோடு சாப்பிடவேண்டும்.