அனைவரும் அதிகம் விரும்பக்கூடிய இயற்கை பானங்களில் ஒன்று இளநீர். எந்த வித செயற்கை ரசாயனம் கலக்கப்படாத 100 சதவீதம் இயற்கையான பானம் என்றல் அது இளநீர்தான்.
இளநீரில் சோடியம், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், செலினியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து போன்ற பல்வேறு கனிமங்களும் நிறைந்திருக்கின்றன.
இளநீர் சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 250 – 300 ML இளநீர் அருந்தலாம். அளவுக்கு அதிகமாக அருந்தினால் உடலில் பொட்டாசியம் மற்றும் கார்போஹைட்ரேட் அளவு அதிகரித்துவிடும்.
சிறுநீர் எரிச்சல், மலச்சிக்கல், வயிற்றுப்புண், வாய்ப்புண் போன்ற பாதிப்புகளை இளநீர் சரிசெய்யும்.
உடற்பயிற்சி செய்பவர்கள், உடற்பயிற்சிக்கு முன்போ அல்லது பின்போ இளநீர் குடிக்கலாம். இதனால் உடற்பயிற்சி செய்வதன் பலன் அதிகரிக்கும்.
இளநீர் உடல் உஷ்ணத்தை குறைப்பதுடன், உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. ரத்தத்தில் கொழுப்பின் அளவை குறைப்பதற்கும் சருமத்தை பொலிவாக வைத்திருக்கவும் இளநீர் பயன்படுகிறது. முகப்பருக்கள் வருவதையும் இளநீர் தடுக்கும்.
இளநீர் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் வறட்சி மற்றும் நாக்கில் ஏற்படும் வறட்சியைச் சரி செய்யும்.
இளநீர் இரத்தத்தை சுத்தப்படுத்தி ரத்த சோகையை விரட்டும். சிறுநீரகம் சீராக இயங்கவும் சிறுநீரக கல்லடைப்பு ஏற்படாமல் தடுக்கவும் இளநீர் பயன்படுகிறது.
கோடைகாலத்தில் ரசாயனம் கலந்த குளிர்பானங்களை தவிர்த்துவிட்டு, 100 சதவீதம் இயற்கையான இளநீரை அருந்தி பலன் பெறுங்கள்.