உலகின் மிகப்பெரிய பணக்காரராக இருப்பவர் எலான் மஸ்க், டெஸ்லா, ஸ்பெஸ் எக்ஸ் போன்ற நிறுவனங்களை நடத்தி வரும் இவர் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளார். தற்போது எலான் மஸ்க் கடந்து வந்த பாதையை பற்றி பாப்போம்.
எலான் மஸ்க் ஜூன் 28, 1971 ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் பிறந்தார். இவருடைய தந்தை பொறியாளர். தாயார் சத்துணவு நிபுணர். சிறுவயதிலேயே அதிகம் புத்தகங்களை படிக்கும் திறன் மிக்கவராக இருந்துள்ளார் எலான் மஸ்க். இளம் வயதிலிருந்தே டெக் உலகில் ஆர்வம் கொண்ட எலான் மஸ்க் இவர் 12 வயதிலேயே ‘Blaster’ என்ற வீடியோ கேமை வடிவமைத்தார். அதை PC and Office Technology என்ற இதழிடம் 500 டாலருக்கு விற்பனை செய்தார்.
கனடாவில் உள்ள குவீன்ஸ் பல்கலைக் கழகத்திலும், பின்னர் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்திலும் படித்தார்.
1995-ல் சகோதரருடன் இணைந்து Zip2 என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த நிறுவனத்தை 1999-ல் Compaq நிறுவனத்திடம் 307 மில்லியன் டாலருக்கு விற்றார். இதில் மஸ்க்கின் பங்காக 22 மில்லியன் டாலர் கிடைத்தது.
இதன் பிறகு 10 மில்லியன் டாலர் முதலீட்டில் ஆன்லைன் பேங்கிங் நிறுவனமான X.com-ஐ தொடங்கினர். இது Confinity என்ற நிறுவனத்துடன் இணைந்து PayPal ஆனது. ஆரம்பக்கட்டத்தில் எலான் மஸ்க் CEO-வாக PayPal நிறுவனத்தை சரியான பாதையில் கொண்டு சென்றார். பின்பு அதிலிருந்து விலகினார்.
பின்னாளில் PayPal, ebay நிறுவனத்திற்குக் கைமாறியது. இதன் மூலமாக சுமார் 180 மில்லியன் டாலர் எலான் மஸ்க்கிற்கு கிடைத்தது. அதில் கிடைத்த பணத்தை SpaceX நிறுவனத்திலும், டெஸ்லா நிறுவனத்திலும் முதலீடு செய்தார்.
2002-லேயே தனியார் விண்வெளி ஆராய்ச்சி, மின்சார கார் போன்றவற்றில் பெரு முதலீடுகள் செய்தது அவராக மட்டுமே இருக்கமுடியும்.
கடந்த 2013ம் ஆண்டு எலான் மஸ்க் டெஸ்லா நிறுவனத்தி 11 பில்லியன் டாலருக்கு கூகுள் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய முயன்றார். ஆனால் கடைசி நேரத்தில் அதை கைவிட்டு விட்டார். தற்போது டெஸ்லா நிறுவனத்தின் மதிப்பு 100 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.
எலான் மஸ்க்கின் மின்சார கார் நிறுவனமான டெஸ்லா வெறும் 70 மில்லியன் டாலர் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது அதன் மதிப்பு சுமார் 650 பில்லியன் டாலராக உள்ளது.
2008ல் டெஸ்லா திவாலாகும் நிலை ஏற்பட்டது. தனது சொந்த பணத்தை முதலீடு செய்து, அந்த நிறுவனத்தைக் காப்பாற்றி CEO-வாகவும் பதவியேற்று கொண்டார். இதன் காரணமாக 2008 என் வாழ்வில் மிகவும் மோசமான வருடம்” என அவர் அடிக்கடி கூறுவது உண்டு.
உலக பணக்காரர்கள் பட்டியலில் 35வது இடத்தில் இருந்த அவர் ஒரே ஆண்டில் அசுர வளர்ச்சி பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளார். எலான் மஸ்க்கின் தற்போதைய சொத்து மதிப்பு 195 பில்லியன் டாலர். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 14 லட்சம் கோடி ரூபாய்.
டெக் உலகில் ஒரு முன்னோடியாகவும் மிக முக்கிய ஆளுமையாகவும் பார்க்கப்படுகிறார் எலான் மஸ்க். மேலும் பலவிதமான சோதனைகளையும், சர்ச்சைகளையும் கடந்து இன்று உலகின் மிகப்பெரிய பணக்காரராக உருவெடுத்திருக்கிறார்.